பிரஜ்வல் ரேவண்ணா | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 04 ஜூன் 2024 | |
முன்னையவர் | தேவ கௌடா |
தொகுதி | ஹாசன் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரஜ்வல் ரேவண்ணா 5 ஆகத்து 1990 ஹாசன், கர்நாடகா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமயச் சார்பற்ற் ஜனதா தளம் |
பெற்றோர் | எச். டி. ரேவண்ணா பவானி |
உறவினர் | தேவ கௌடா (தாததா) எச். டி. குமாரசாமி (சித்தப்பா) நிகில் குமார் (நடிகர்) (சித்தப்பா எச். டி. குமாரசாமி மகன்) |
வாழிடம்(s) | ஹாசன், கர்நாடகா[1] |
முன்னாள் கல்லூரி | இளநிலை இயந்திரவியல் பெங்களுர் தொழில்நுட்பக் கல்லூரி[1] |
தொழில் | அரசியல்வாதி |
மூலம்: [1] |
பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna) (பிறப்பு:5 ஆகஸ்டு 1990) சமயச் சார்பற்ற ஜனதா தளத்தின் அரசியல்வாதியும், முன்னாள் இந்தியப் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் கர்நாடாக அமைச்சர் எச். டி. ரேவண்ணாவின் மகனும் ஆவார். 2019 மக்களவை தேர்தலில் இவர் ஹாசன் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மக்களவையின் மூன்றாவது இளம் உறுப்பினர் ஆவார்.[3][4]
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மக்களவை உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, 2019ம் மக்களவைத் தேர்தலின் போது, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை அளித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் 1 செப்டம்பர் 2023 அன்று பிரஜ்வல் ரேவண்ணாவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியது.[5] [6][7]