பிரதானியா புதைப்படிவ காலம்:ஆரம்ப ஜூராசிக், | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
பேரினம்: | |
சிற்றினம் | |
|
பிரதானியா (Pradhania)(இந்தியப் புள்ளியியல் கழகத்தில் புதைபடிவ சேகரிப்பாளரான துய்யா பிரதான் நினைவாகப் பெயரிடப்பட்டது) என்பது இந்தியாவின் சினிமுரியன் கால (ஆரம்ப ஜுராசிக்) அப்பர் தர்மராம் உருவாக்கத்தைச் சேர்ந்த மாசோசுபோண்டிலிட் சாரோபோடோமார்ப் தொன்மாவின் பேரினமாகும் . இது முதன்முதலில் 2007-ல் டி. எசு. குட்டி, சங்கர் சட்டர்ஜி, பீட்டர் எம். கால்டன் மற்றும் பால் அப்சர்ச் ஆகியோரால் பெயரிடப்பட்டது. இதனுடைய மாதிரிச் சிற்றினப் பெயர் பிரதானியா கிராசிலிசு ஆகும். இது சாதாரண அளவிலான ஒரு சௌரோபோடோமார்ப் (பல்லி பாதமுடையன) ஆகும். இதன் நீளம் சுமார் நான்கு மீட்டர்கள் மட்டுமே (13 அடி). இந்த அளவானது துண்டு துண்டாகக் காணப்பட்ட எச்சங்களிலிருந்து அறியப்படுகிறது.[1] இது முதலில் ஒரு அடிப்படை சௌரோபோடோமார்ப் எனக் கருதப்பட்டது;[1] ஆனால் நோவாஸ் மற்றும் பலர் நிகழ்த்திய புதிய தொகுதிப் பிறப்பு பகுப்பாய்வு இதனை 2011-ல் பிரதானியா ஒரு மாசுபோண்டிலிட் என்று கூறுகிறது.[2] பிரதானியாவில் தொகுதிப் பிறப்பு பகுப்பாய்வில் மீட்கப்பட்ட மாசோபோடா தொன்மாவின் இரண்டு வகைப்பாட்டுக் குழுவின் பண்புகளுடைய கொள்கையினை முன்வைக்கின்றது.[2]