பிரதாப் சி. ரெட்டி Prathap C. Reddy | |
---|---|
2014இல் ரெட்டி | |
பிறப்பு | பிரதாப் சந்திர ரெட்டி 5 பெப்ரவரி 1933 அரகொண்டா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுடான்லி மருத்துவக் கல்லூரி |
பணி | தொழிலதிபர் |
வாழ்க்கைத் துணை | சுச்சரிதா ரெட்டி |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
விருதுகள் | பத்ம விபூசண் (2010) பத்ம பூசண் (1991) |
பிரதாப் சந்திர ரெட்டி (Prathap Chandra Reddy) (பிறப்பு; பிப்ரவரி 5,1933)[1][2] ஓர் இந்திய தொழில்முனைவோரும் மற்றும் இதய நிபுணரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனைகளின் சங்கிலியான அப்போலோ மருத்துவமனைகளை நிறுவினார்.[3] இந்தியா டுடே தனது 2017 ஆம் ஆண்டின் இந்தியாவின் 50 மிக சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலில் இவருக்கு 48 வது இடத்தை அளித்தது.[4]
போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2024இன் இந்தியாவின் 100 பணக்கார தொழிலதிபர்களின் பட்டியலின் படி, பிரதாப் ரெட்டி 3.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 94 வது இடத்தில் உள்ளார்.[5]
மருத்துவர் ரெட்டி சென்னையிலுள்ள இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இதய மருத்துவராகப் பயிற்சி பெற்றார். பாஸ்டனிலுள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உயர்மருத்துவப் படிப்பை முடித்து, அமெரிக்காவின் மிசோரி மாநில இதய மருத்துவமனையில் பல ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அங்கு இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[6]
ரெட்டி தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரீத்தா ரெட்டி, சங்கீதா ரெட்டி, சோபனா மற்றும் சுனிதா என நான்கு மகள்கள் பிறந்தனர். இவரது மகள்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைகளில் இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர்.[7]