பிரதாப் மாணிக்யா | |
---|---|
திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | அண்.1487 |
முன்னையவர் | முதலாம் ரத்ன மாணிக்கியா |
பின்னையவர் | முதலாம் விசய மாணிக்யா |
Consort | தைத்யநாராயணன் என்பவரின் சகோதரி [note 1] |
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் விசய மாணிக்யா இரத்னாவதி தேவி[note 2] |
மரபு | மாணிக்கிய வம்சம் |
தந்தை | முதலாம் ரத்ன மாணிக்கியா |
பிரதாப் மாணிக்கியா (Pratap Manikya) (இறப்பு சுமார் கி.பி. 1487) 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்
பிரதாப் மாணிக்கியா, திரிபுராவின் வரலாற்றைக் கூறும் இராஜ்மாலாவில் முதலாம் தர்ம மாணிக்கியாவின் மகன் எனக் கூறப்பட்டாலும், [3] பின்னர் வந்த தரவுகள் இது காலவரிசைப்படி சாத்தியமற்றது என்பதை நிரூபித்தது. [4] அதற்கு பதிலாக இவர் தர்ம மாணிக்கியாவின் பேரன் என்றும், இவரது தந்தை முதலாம் ரத்ன மாணிக்கியா என்றும் நிறுவப்பட்டது. [5] பிரதாப்பின் ஆட்சியின் ஆண்டுகள் குறித்தும் நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. இவரது ஆட்சியின் போது அச்சிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாணயம் சக 1412 (1490 கி.பி.) ஆண்டைக் கொண்டுள்ளது. இருப்பினும் நவீன பாணி எழுத்துக்கள் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்திற்கு வழிவகுத்தது. [6] பிரதாப்பின் உடனடி வாரிசுகள் முறையே 1488 மற்றும் 1489 ஆம் ஆண்டுகளில் நாணயங்களை அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. [5]
இவரது மூத்த சகோதரர் தான்ய மாணிக்கியா முக்கிய இராணுவ தளபதிகளின் ஆதரவுடன் இவருக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தினார். [7] இராஜ்மாலாவின் கூற்றுப்படி, அவரது துரோகத்தின் காரணமாக, பிரதாப் இந்த பிரபுக்களின் ஆதரவை விரைவில் இழந்தார். அவர்கள் இவருக்கு எதிராக ஒரு சதியைத் தொடங்கினர். பிரதாப் இரவில் தூங்கும் போது கொல்லப்பட்டதாக "இராஜ்மாலா" கூறுகிறது. [8]
சிறுவயதான முதலாம் விசய மாணிக்கியா (இவரது மகனாக இருக்கலாம்) மற்றும் பிரதாப்பின் [9] சகோதரர் முகுத் மாணிக்கியா ஆகியோரால் இவருக்குப் பின் அடுத்தடுத்து பதவியேற்றனர். சிம்மாசனம் இறுதியாக தன்யாவின் மீது குடியேறியது. இவருடைய நீண்ட ஆட்சி 1515 வரை நீடித்தது.