பிரதாப்கார் Pratapgarh | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிபுரா |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 25,890 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பிரதாப்கார் (Pratapgarh) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.
23.81° வடக்கு 91.30° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பிரதாப்கார் நகரம் பரவியுள்ளது[1].
இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] பிரதாப்கார் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 25,890 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 72% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 77 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 67 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 11% அளவில் உள்ளனர்.
இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக பிரதாப்கார் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.[3]