பிரதிபா பர்மர் (Pratibha Parmar) ஒரு பிரித்தானிய எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அமெரிக்க தீவிர பெண்ணிய எழுத்தாளரும், ஆர்வலரும் ஆபாசத்தின் பகுப்பாய்விற்கு மிகவும் பிரபலமானவருமான ஆண்ட்ரியா டுவர்கினைப் பற்றி ஆலிஸ் வாக்கர்: பியூட்டி இன் ட்ரூத் மற்றும் மை நேம் இஸ் ஆண்ட்ரியா போன்ற பெண்ணிய ஆவணப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.
பர்மர் டபிள்யு[1] கென்யாவின் நைரோபியில், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தார். பின்னர் குடும்பத்தினர் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தனர். [2] இவர் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்றார். மேலும், முதுகலை படிப்புக்காக பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அஞ்செலா டேவிசு, ஜூன் ஜோர்டான், செர்ரி மொராகா, பார்பரா ஸ்மித் மற்றும் ஆலிஸ் வாக்கர் போன்ற எழுத்தாளர்களால் பார்மர் பெண்ணியத் தாக்கம் பெற்றார். [3]
1991இல் வெளியான குஷ் என்றத் திரைப்படத்தின் மூலம், பார்மர், ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவில் உள்ள தெற்காசிய நேர்பாலீர்ப்பு பெண்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களின் பாலுணர்வெழுப்பும் உலகத்தை ஆவணப்படக் காட்சிகள் மற்றும் நாடகக் காட்சிகளின் கலவையைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார். [4] ஆலிஸ் வாக்கர்: பியூட்டி இன் ட்ரூத் என்ற ஆவணப்படம், 1991 ஆம் ஆண்டு ஜூன் ஜோர்டான் மற்றும் ஏஞ்சலா டேவிஸ் வழியாக பார்மர் முதன்முதலில் சந்தித்த எழுத்தாளரும் ஆர்வலருமான ஆலிஸ் வாக்கரின் வாழ்க்கையைப் பற்றியது. வாக்கர் மற்றும் பார்மர் பெண் உறுப்பு சிதைப்பு பற்றிய வாரியர் மார்க்ஸ் என்ற ஆவணப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். [5] [6] பின்னர் இவர்கள் வாரியர் மார்க்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டனர். [7]
2022 ஆம் ஆண்டில், பார்மர் தனது இரண்டாவது அலை பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ஆண்ட்ரியா துவொர்கின் பற்றிய மை நேம் இஸ் ஆண்ட்ரியா என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார். [8]
பார்மர் 1993 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பிரேம்லைன் திரைப்பட விழாவில் பிரேம்லைன் விருதை வென்றார். மேலும், இவரது படங்கள் பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளன.[3] 2016 இல், இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார். [9]