பிரபா ஆத்ரே | |
---|---|
பிறப்பு | புனே, பம்பாய் மாகாணம், இந்தியா | 13 செப்டம்பர் 1932
இறப்பு | 13 சனவரி 2024 புனே, மகாராட்டிரா | (அகவை 91)
படித்த கல்வி நிறுவனங்கள் | புனே பல்கலைக்கழகம் (இளங்கலை) கந்தர்வ மகாவித்யாலயா இசைப்பள்ளி (முனைவர்) |
செயற்பாட்டுக் காலம் | (1950 - தற்போது வரை) |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (1991) |
வலைத்தளம் | |
www |
பிரபா ஆத்ரே (Prabha Atre, 13 செப்டம்பர் 1932 – 13 சனவரி 2024) கிரானா கரானாவைச் (பாடும் பாணி) சேர்ந்த ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் 11 புத்தகங்களை (ஒரே சமயத்தில்) வெளியிட்ட உலக சாதனையைப் படைத்துள்ளார். 18 ஏப்ரல் 2016 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இசை குறித்த 11 புத்தகங்களை வெளியிட்டார்.
புனேவில் அபாசாகேப் மற்றும் இந்திராபாய் ஆத்ரே ஆகியோருக்கு பிரபா பிறந்தார். குழந்தைகளாக, பிரபாவும் இவரது சகோதரி உஷாவும் இசையில் ஆர்வம் காட்டின. ஆனால் இவர்கள் இருவருமே இசையை ஒரு தொழிலாகத் தொடரத் திட்டமிட்டதில்லை. பிரபாவுக்கு எட்டு வயதாக இருந்தபோது, இவரது தாய் இந்திராபாய் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கவில்லை. பாரம்பரிய இசைப் பாடங்கள் அவரை நன்றாக உணர உதவும் என்று ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில், அவர் சில பாடங்களை கற்ருக்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பாடங்களைக் கேட்பது பிரபாவுக்கு பாரம்பரிய இசையைக் கற்கத் தூண்டியது.
இவரது இசை பயிற்சி குருகுலப் பாடசாலை பாரம்பரியத்தில் இருந்தது . இவர் சுரேஷ்பாபு மானே மற்றும் கிராபாய் பரோடேகர் ஆகியோரிடமிருந்து கிரானா கரானாவிலிருந்து பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். கியாலுக்கு அமீர் கான், தும்ரிக்கு படே குலாம் அலி கான் ஆகிய இரு பெரியவர்களின் செல்வாக்கை இவர் தனது கயாகியில் கொண்டுவந்தார்.
இசையைப் படிக்கும் போது, இவர்அறிவியலிலும், சட்டத்தையும் முடித்து பட்டம் பெற்றார். பின்னர் இசையில் சர்கம் என்ற ஆய்வறிக்கைக்கு முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் இந்திய பாரம்பரிய இசையில் சோல்-ஃபா குறிப்புகள் (சர்கம்) பயன்படுத்துவது தொடர்பானது .
2011 ஆம் ஆண்டு முதல் "சுவரயோகினி டாக்டர் பிரபா ஆத்ரே ராஷ்டிரிய சாஸ்திரிய சங்க புராஸ்கர்" என்ற அரக்கட்டளாஇ தத்யாசாகேப் நேச்சு அறக்கட்டளையும் கன்வர்தன் புனே என்பராலும் நிறுவப்பட்டது.