பிரபோதினி ஏகாதசி प्रबोधिनी एकादशी | |
---|---|
![]() | |
பிற பெயர்(கள்) | தேவுத்தி ஏகாதசி, உத்தன ஏகாதசி, தியோதன், கார்த்திகை சுக்ல ஏகாதசி |
கடைப்பிடிப்போர் | குறிப்பாக இந்துக்கள் |
வகை | இந்து |
முக்கியத்துவம் | சாதுர்மாசிய விரதம் முடியும் காலம் |
அனுசரிப்புகள் | விஷ்ணு மீதான பிரார்த்தனைகள், பூசைகள் உள்ளிட்ட மதச் சடங்குகள் |
நாள் | சந்திர நாட்காட்டி |
நிகழ்வு | வருடாந்திரம் |
தொடர்புடையன | சயன ஏகாதசி |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
பிரபோதினி ஏகாதசி (Prabodhini Ekadashi) தேவோத்தன் ஏகாதசி அல்லது தேவ்தான் என்றும் அழைக்கப்படும், இது இந்து மாதமான கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் பதினைந்து நாட்களில் ( சுக்ல ஏகாதசி ) 11வது சந்திர நாள் ஆகும். கடவுள் விஷ்ணு தூங்குவதாக நம்பப்படும் சாதுர்மாத நான்கு மாத காலத்தின் முடிவை இது குறிக்கிறது. விஷ்ணு சயன ஏகாதசியில் தூங்கி, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்தெழுகிறார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த நாளுக்கு "பிரபோதினி ஏகாதசி" ("பதினொன்றாவது விழிப்பு"), விஷ்ணு-பிரபோதினி ("விஷ்ணுவின் விழிப்பு") , அரி-பிரபோதினி, தேவ-பிரபோதினி, ஏகாதசி, உத்தன ஏகாதசி ("அவரது கண்களைத் திறப்பது"), தியோதன், தேவ உதவ் ஏகாதசி அல்லது தேவுத்தி ஏகாதசி ("கடவுளின் விழிப்பு") என்று அழைக்கப்படுகிறது. திருமணங்கள் தடைசெய்யப்பட்ட சாதுர்மாத முடிவு, இந்து திருமண பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[1] இது கார்த்திகை ஏகாதசி, கார்த்திக் சுக்ல ஏகாதசி, கார்த்திகை என்றும் அழைக்கப்படுகிறது.[2] கார்த்திகை பூர்ணிமாவை தொடர்ந்து வரும் பிரபோதினி ஏகாதசி நாள் தேவ தீபாவளி அல்லது கடவுள்களின் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.[3]
இந்த நாளில்தான் விஷ்ணு துளசி தேவியை மணந்தார் என்றும் நம்பப்படுகிறது.[4]
பிரபோதினி ஏகாதசி அன்று ஒரு விரதம் அனுசரிக்கப்படுகிறது. துளசி செடியுடன் விஷ்ணுவிற்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. துளசியின் கணவராக கருதப்படும் புனித கருப்பு நிற சாளக்கிராமம் கல்லின் வடிவத்தில், இது வணங்கப்படுகிறது. அதன் இருபத்தி நான்கு வரிசைமாற்றங்களில் செய்யப்படுகிறது. மாலை நேரத்தில், சிவப்பு மண், அரிசி மாவு மூலம் தரை வடிவமைப்புகளை மக்கள் தயார் செய்கிறார்கள், இது மிகவும் பிரபலமான பாரம்பரியமாகும். லட்சுமி, விஷ்ணு படங்களும் தயாராகின்றன. மாலை நேரத்தில் லட்சுமிக்கும், விஷ்ணுவிற்கும் பூசை செய்யப்பட்டு கரும்பு, அரிசி, காய்ந்த மிளகாய் போன்றவற்றுடன் பிரசாதமாக வைக்கப்படுகிறது. பின்னர் இது பண்டிதர்களுக்கும் வழங்கப்படுகிறது.[5] இந்த சடங்குத் திருமணம் 'துளசி விழா' என்று அழைக்கப்படுகிறது. பிரபோதினி ஏகாதசிக்கு பதிலாக பிரபோதினி ஏகாதசியின் அடுத்த நாளிலும் இது சில இடங்களில் நடத்தப்படலாம்.[6]
மகாராட்டிராவில், பிரபோதினி ஏகாதசி விட்டலர் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் வர்க்காரி யாத்ரீகர்கள் பண்டரிபுரத்திலுள்ள கோவிலில் திரள்வார்கள். பௌர்ணமி (கார்த்திகை பூர்ணிமா ) வரை ஐந்து நாட்களுக்கு பண்டரிபுரத்தில் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.[7] மகாராட்டிரா அரசின் முதல்வரோ அல்லது அவரது அரசின் சார்பாக ஒருவர் கலந்து கொள்வார். இந்த வழிபாட்டு முறை சர்க்காரி-மகாபூசை என்று அழைக்கப்படுகிறது.[8]
குசராத்தில், 800,000க்கும் அதிகமான யாத்ரீகர்கள் 3661 அடி உயரமும் 8,000 படிகளுடன் கூடிய 32-கிமீ பரப்பளவிலுள்ள கிர்நார் மலையை இரண்டு நாள் சுற்றி சுற்றி வருகின்றனர். சமணர்களுக்கும் கிர்நார் மலையை வலம் வருதல் முக்கிய விரதமாக உள்ளது. இந்துகளுக்கு மகா சிவராத்திரி விரதமாக உள்ளது.
ராஜஸ்தானில், புஷ்கரில் புஷ்கர் திருவிழா அல்லது புஷ்கர் மேளா எனப்படும் மேளா இந்த நாளில் தொடங்கி முழு நிலவு நாள் (கார்த்திகை பூர்ணிமா) வரை தொடர்கிறது. பிரம்மாவின் நினைவாக இந்த விழா நடத்தப்படுகிறது. புஷ்கர் ஏரியில் ஐந்து நாட்கள் திருவிழாவின் போது செய்யப்பட்டும் நீராட்டம் ஒருவரை முக்திக்கு இட்டுச் செல்லும் என்று கருதப்படுகிறது. சாதுக்கள் இங்கு கூடி ஏகாதசி முதல் பௌர்ணமி வரை குகைகளில் தங்குவார்கள். புஷ்கரில் சுமார் 200,000 மக்களும் 25,000 ஒட்டகங்களும் இந்தத் திருவிழாவிற்கு கூடுகின்றனர். புஷ்கர் மேளா ஆசியாவின் மிகப்பெரிய ஒட்டக கண்காட்சியாகும்.[9][10][11][12][13]
பிரபோதினி ஏகாதசி கரும்பு அறுவடையின் தொடக்கத்தையும் குறிக்கிறது. விவசாயி வயலில் பூசை செய்து, சம்பிரதாயமாக கரும்புகளை வெட்டி, சில கரும்புகளை வயலின் எல்லையில் வைத்து, கரும்புகளை ஒரு பிராமணன் ,பூசாரி, கொல்லன், தச்சன், சலவை செய்பவன், தண்ணீர் எடுத்துச் செல்பவன் ஆகியோருக்கு விநியோகம் செய்து வீட்டிற்கு ஐந்து கரும்புகளை எடுத்துச் செல்கிறார். வீட்டில், விஷ்ணு, அவரது மனைவி லட்சுமி ஆகியோரின் உருவங்கள் ஒரு மரப் பலகையில் மாட்டு சாணம், வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வரையப்பட்டிருக்கும். கரும்புகள் மேலே ஒன்றாகக் கட்டப்பட்டு பலகையைச் சுற்றி வைக்கப்படும். சில பருத்தி, வெற்றிலை, பருப்பு, இனிப்புகள் ஆகியவையும் படைக்கப்படும். மேலும் ஒரு வேள்வியும் நடத்தப்படுகிறது. பிரார்த்தனை பாடல்களும் பாடப்படுகிறது. பின்னர், கரும்புகள் பின்னர் உடைக்கப்பட்டு, ஹோலியில் எரிக்கப்படும் வரை கூரையில் தொங்கவிடப்படும்.[14]
பிரபோதினி ஏகாதசி சுவாமிநாராயணர் சம்பிரதாயத்தில் முக்கியமான ஏகாதசியாக கருதப்படுகிறது. இந்த நாள் அக்டோபர் 28, 1800 அன்று சுவாமிநாராயணனுக்கு அவரது குரு இராமானந்த் சுவாமியால் வழங்கப்பட்ட மததீட்சையை நினைவுகூருகிறது.[15] நவம்பர் 16, 1801 அன்று இராமானந்த சுவாமிகள் சுவாமிநாராயணனுக்கு அதிகாரம் அளித்ததையும் இந்த நாள் நினைவுபடுத்துகிறது.[15] சுவாமிநாராயணனைப் பின்பற்றுபவர்கள் நீர் கூட அருந்தாத விரதத்தைக் கடைப்பிடித்து, தெய்வங்களுக்கு புதிய காய்கறிகளை பிரசாதமாக வழங்குகிறார்கள்.[16]
{{cite web}}
: |last=
has generic name (help)