51°30′18″N 0°5′41″W / 51.50500°N 0.09472°W
பிரமா தேநீர், காப்பி அருங்காட்சியகம் (Bramah Tea and Coffee Museum) என்பது தென்கிழக்கு இலண்டனில் உள்ள ஓர்அருங்காட்சியகம். தேநீர் மற்றும் காப்பியின் வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகம் இதுவாகும். ஆப்பிரிக்கா மற்றும் தொலை கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு 400 வருடங்களுக்கு முன்னர் தேநீர், காப்பி ஆகிய இரண்டு பொருட்களின் வருகை, வணிக மற்றும் சமூக வரலாற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகம் இதுவாகும்.
இந்த அருங்காட்சியகம் எட்வர்ட் பிராமாவால் 1992ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1] இது முன்பு பட்லர்ஸ் வார்ப் என்ற இடத்திலிருந்தது. பின்னர் இது இலண்டன் பிரிட்ஜ் நிலையம் மற்றும் பரோ சந்தைக்கு மிக அருகில் உள்ள எஸ். இ. 1-ல் உள்ள 40 சவுத்வார்க் தெருவிற்கு மாற்றப்பட்டது. இந்த இடத்தில் அருங்காட்சியகமும் தினமும் காபி மற்றும் தேநீர் பரிமாறப்படும் தேரீர் அறை ஒன்றும் செயல்படுகிறது.
எட்வர்ட் பிரமா தனது 76 வயதில் கிறிஸ்ட்சர்ச், டோர்செட் 15 சனவரி 2008 அன்று இறந்தார். இவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், பிரிட்டனின் தேயிலை பாரம்பரியம் என்று அழைக்கப்படும் ஒரு புத்தகத்தினை எழுதியதில் பிரமா முக்கிய பங்குவகித்தார்.
2008-ல் அருங்காட்சியகம் மூடப்பட்டது. மறுசீரமைப்பு அல்லது இடமாற்றம் செய்வதற்கான திட்டங்கள் இருந்தபோதிலும், அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படவில்லை.[2]