பிரம்மத்தேரியம் புதைப்படிவ காலம்:Late Miocene[1]-Pliocene | |
---|---|
பிரம்மத்தேரியம் பெரிமென்சி மண்டையோடு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜிராபிடே
|
பேரினம்: | பிரம்மத்தேரியம் பால்கோனர், 1845
|
சிற்றினம் | |
|
பிரம்மத்தேரியம் (Bramatherium-பிரம்மாவின் விலங்கு) என்பது ஆசியாவில் இந்தியா முதல் துருக்கி வரை அழிந்துபோன ஒட்டகச்சிவிங்கிகளின் பேரினமாகும். இது பெரிய சிவத்தேரியத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது.
இதன் பொதுவான பெயரின் முதல் பகுதி சமசுகிருதத்தில் இந்து படைப்புக் கடவுளான பிரம்மாவினைக் குறிக்கிறது. இரண்டாவது பகுதியான "தேரியம்", என்ற பண்டைக் கிரேக்க வார்த்தையின் பொருள் "மிருகம்" என்பதாகும்.
பிரம்மத்தேரியம் சிவத்திரியத்தை போலவே பெரிய கட்டமைப்புடன் கூடிய விலங்காகும். இது பெரிதும் ஒக்காப்பியினை ஒத்திருக்கும். நான்கு குழல்கால் கூம்பு போன்ற கிரீடம் தொகுப்பைத் தலையில் கொண்டிருந்திருக்கும். புதைபடிவங்களின் பற்களை ஆய்வு செய்ததில், உயிருள்ள விலங்குகள் வனப்பகுதிகளிலும் ஈரநிலங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.[2]