பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman) என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருது. இது மகாத்மா காந்தி அடிகள் 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த தினமான ஜனவரி ஒன்பதாம் நாளை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாட்டு இந்தியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[1]
வெளிநாடுவாழ் இந்தியர் நாள் (பிரவாசி பாரதிய திவாஸ்) ஆண்டுதோறும் ஜனவரி 7-9ம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் இந்திய மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும் இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக் காட்டவும் இவ்விழாக்கள் உதவும்.