பிரவீணா

பிரவீணா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பிரவீணா லலிதாபாய்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1992தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திரு நாயர்

பிரவீணா (Praveena) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் குரல் கலைஞர் . ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் [1] சக்தி / பார்வதி தேவி பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். இது இந்தியாவின் மிக நீண்ட புராணத் தொடராகும்.[சான்று தேவை] இவர் பல மலையாளப் படங்கள் மற்றும் பல முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி மற்றும் துணைப்பாத்திரங்களில் நடித்துவருகிறார்.[2]

1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் இவர் நடிப்புத் தொழிலுக்கு வந்தார்.[3] 1998 ஆம் ஆண்டில் அக்னிசாட்சி [4] மற்றும் 2008 இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் [5][6] 2010 இல் எலெக்ட்ரா [7] மற்றும் 2012 இல் இவன் மேகரூபன் ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்றார்.[8]

தொழில்

[தொகு]

டி. பத்மநாபனின் விருது பெற்ற புதினமான கௌரியின் தழுவலில் பிரவீணா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் சப்தசுவரங்கள் என்ற நிகழ்ச்சிக்காக தூர்தர்சனில் தோன்றினார். பின்னர் பிரவீணா மலையாள திரையுலகில் அனில் பாபுவின் கலியூஞ்சல் (1997) மூலம் அறிமுகமானார், அதில் திலீப்புக்கு ஜோடியாக நடித்தார். மின்னர் அக்னிசாட்சி, இங்லீஷ் மீடியம், வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும் , ஸ்வர்ணம், ஒரு பெண் ரெண்டாணும் உட்பட பல படங்களில் தோன்றினார். ஓரல் மாத்ரம் தி டுரூத், எழுப்புண்ணா தரகன் ஆகிய படங்களில், இவர் மம்மூட்டியின் சகோதரியின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் கேரள அரசு திரைப்பட விருதை நான்கு முறை வென்றுள்ளார். 1998 ஆம் ஆண்டில், அக்னிசாட்சியில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றார். மேலும் 2008இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் என்ற படத்தில் நடித்த பாத்திரத்திற்காக அதே விருதை வென்றார். 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், முறையே எலெக்ட்ரா மற்றும் இவன் மேகரூபனுக்காக சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றார்.

இவர் மழவில் மனோரமா தொலைக்காட்சியில் சுவப்னம், மேகம் மவுனம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். கைரளி தொலைக்காட்சியில் மம்மி & மீ, ஏசியநெட்டில் காமெடி ஸ்டார்ஸ், ஸ்டார் சிங்கர் உள்ளிட்ட பல உண்மைநிலை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.

இவர் ஜோதிமயிக்காக என்வீ வீடு அப்புவின்டேயில், காவ்யா மாதவனுக்கு மிழி ரண்டு மற்றும் சதானந்தந்தே சமயமும் பத்மப்ரியாவுக்காக அம்ருதம் போன்ற படங்களில் பின்ணணி குரல் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பிரவீணா 11 ஏப்ரல் 1978 இல் ராமச்சந்திரன் நாயர் மற்றும் லலிதாபாய்க்கு பிறந்தார். அவருடைய தந்தை ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். பிரவீணாவின் அண்ணன் பிரமோத் நாயர், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறார். இவர் துபாயில் வங்கியாளராக பணியாற்றிய பிரமோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.[9] 

விருதுகள்

[தொகு]

கேரள அரசு திரைப்பட விருது

  • 1998: இரண்டாவது சிறந்த நடிகை - அக்னிசாட்சி
  • 2008: இரண்டாவது சிறந்த நடிகை - ஒரு பெண்ணும் ரெண்டாணும்
  • 2010: சிறந்த பின்னணி குரல் கலைஞர் - எலெக்ட்ரா
  • 2011: சிறந்த பின்னணி குரல் கலைஞர் - இவன் மேகரூபன்

ஏசியநெட் தொலைக்காட்சி விருதுகள்

  • 2005- சிறந்த நடிகை - மேகம்
  • 2011- மிகவும் பிரபலமான நடிகை - தேவிமஹாத்யம்
  • 2018- சிறந்த கதாபாத்திர நடிகை- கஸ்தூரிமான்

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள்

  • திரைப்பட விமர்சகர் விருது 1999 (சிறந்த நடிகை) - வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும், சபல்யம், அக்னிசாட்சி

சன் குடும்பம் விருதுகள்

  • 2018 - சிறந்த தாய்க்கான சன் குடும்பம் விருதுகள் -பிரியமானவள்

திரைப்படவியல்

[தொகு]

நடிகராக

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1992 கௌரி
1997 இராஜதந்திரம்
1997 கலியூஞ்சல் ராதா அறிமுக படம்
1997 ஒராள் மாத்திரம் மாளவிகா மேனன்
1998 கல்லப்பம் கோபிகா
1998 பிரணாயவர்ணங்கள் வனஜா
1998 தி டிரூத் காயத்திரி
1998 ரீகிருஷ்ணாபுரதே நட்சத்திரம்லக்கம் ஆசா
1999 ஒன்னாம்வட்டம் கண்டப்போல் சொப்ணா
1999 காந்தியன் திவ்யா
1999 அக்னிசக்தி தங்கம்
1999 எழுபுன்னா தாரகன் ராணி
1999 மழவில்லு மீனா
1999 ரிசிவம்சம் நாடக நடிகை
1999 இங்லீஷ் மீடியம் சினேகலதா
1999 சாபல்யம் அம்மு
1999 வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும் வசந்தி
2000 பைலெட்ஸ் சிண்ட்ரெல்லா / மேகா மேத்யூ
2000 புனரதிவாசம் சாவித்திரி
2000 மனசில் ஒரு மஞ்சுத்துளி மாயா
2001 நளசரிதம் நாலாம் திவசம் இந்து
2001 ஸ்வர்ணசிரகுமாய் -
2007 ராக் அன் ரோல் மரியா
2008 சுவர்ணம் ராதா
2008 திரக்கதா மீரா சிறப்புத் தோற்றம்
2009 ஒரு பெண்ணும் ரெண்டாணும் பங்கியம்மா
2009 டூப்லிகேட்
2009 விளபங்கல்காப்புரம் விலாசினி
2010 கிலாபத் -
2010 பெண்பட்டணம் வழக்கறிஞர் மகேஸ்வரி ஐயர்
2010 இங்கனேயும் வாய்மொழி பிரியம்வதா/ஷீலா தேவி
2011 வரதனம்
2011 சூப்பர் ஹீரோ
2011 பியூட்டிபுள் மருத்துவர்
2012 மஞ்சடிக்குரு சீலா
2012 முல்லமோட்டும் முந்திரிச்சாரும் சுமித்ரா
2012 ஆகாஸ்மிகம் ஷைலஜா டீச்சர்
2012 உஸ்தாத் இன் கோவா ஆனி
2012 உஸ்தாத் ஓட்டல் பரீதா ரசாக்
2013 ஹனி பீ லிசம்மா
2013 மெமோரிஸ் பார்வதி
2013 வீப்பிங் பாய் நபீசு
2013 வெடிவாழிபாடு தெய்வீக பாத்திரம்/பயணி
2013 எழு சுந்தர ராத்திரிகள் மரு. டெய்சி
2013 அவிசரிதா சாருலதா
2014 லா பாய்ட் கீதா
2014 பெங்களூர் டேய்ஸ் சோபா
2014 ஊர்வசா -
2014 கலர் பலூன் சீதா
2014 ஸ்டெடி டூர் பத்மினி டீச்சர்
2014 லிட்டில் சூப்பர்மேன் 3டி ஜெனி வில்சன் 015 இல் மீண்டும் வெளியிடப்பட்டது
2015 மிலி நான்சி
2015 100 டேஸ் ஆப் லவ் அடூர் பங்கஜம்
2016 வெற்றிவேல் இராசமாணிக்கம் மனைவி தமிழ் படம்
2016 காற்றும் மழையும் -
2016 புத்தனும் சாப்ளினும் சிரிக்குன்னு இந்துலேகா
2017 கிரீன் ஆப்பில் -
2017 ஹனி பீ 2 லிசாம்மா
2017 தீரன் அதிகாரம் ஒன்று தீரனின் தாய் தமிழ் படம்
2017 விமானம் கீதா
2018 கார்பன் சுஜாதா விருந்தினர் தோற்றம்
2018 கதா பஞ்ச கதா ரோசிகுட்டி
2018 சாலக்குடிக்காரன் சாங்கதி குடும்பத்தலைவி ஒளிப்படம் மட்டும்
2018 சவாரி நிர்மளா டீச்சர்
2018 மயில் -
2018 சாமி 2 மீனாட்சி தமிழ்படம்
2019 கோமாளி ரவியின் தாய் தமிழ்படம்
2019 ஆகாச கங்கா 2 ஒப்போல்
2019 ஹேப்பி சர்தார் அன்னம்மா இந்தர்பால் சிங்
2020 பீஷ்மா பீஷ்மாவின் தாய் தெலுங்கு படம்
2021 டெடி லட்சுமி தமிழ்

தொலைக்காட்சி

[தொகு]

தொலைக்காட்சி தொடர் நடிகையாக

[தொகு]
ஆண்டு நிகழ்ச்சி பங்கு மொழி தொலைக்காட்சி குறிப்புகள்
2002 கங்கா கங்கா மலையாளம் டிடி மலையாளம்
2003 ஸ்வப்னம் ஜானகி ஏஷ்யாநெட்
2004 மேகம் கிருஷ்ணா
2004–2005 தம்பத்ய கீதங்கள்
2005 ஸ்வரம் அம்ருதா தொலைக்காட்சி
2006 மின்னாரம் ஏஷ்யாநெட்
மௌனம் சூர்யா தொலைக்காட்சி
2007 நந்தனம்
பிரயாணம்
2008 சுவாமி அய்யப்பன் தட்சாயணி ஏஷ்யாநெட்
2008–2012 தேவிமகாத்மியம் தேவி ஆதி பராசக்தி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
2008 நம்ம குடும்பம் மகாலட்சுமி தமிழ் கலைஞர் தொலைக்காட்சி
2009–2011 மகாராணி சந்தியா விஜய் தொலைக்காட்சி
2010–2011 ஆதி பராசக்தி காமாட்சி தேவி விஜய் தொலைக்காட்சி
2010 மழையரியதே ஆச்சு மலையாளம் சூர்யா தொலைக்காட்சி
2011 சில நேரங்கலில் சில மனுஷ்யர் கங்கா அம்ருதா தொலைக்காட்சி
2012 சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா தேவி ஏஷ்யாநெட்
ஸ்ரீ பத்மநாபம் தன்கா அம்ருதா தொலைக்காட்சி
மலகாமர் அக்னெஸ் மழவில் மனோரமா
2012– 2014 மோகக்கடல் கிருஷ்ணா சூர்யா தொலைக்காட்சி
2013 உளக்கடல் கைரளி தொலைக்காட்சி
2014 கௌரி தூர்தர்ஷன்
வடு ஹேமா சூர்யா தொலைக்காட்சி
2015–2019 பிரியமானவள் உமா தமிழ் சன் தொலைக்காட்சி
2017 - 2020 கஸ்தூரிமான் சேதுலட்சுமி மலையாளம் ஏஷ்யாநெட்
2019 - 2020 மகராசி செண்பகம் தமிழ் சன் தொலைக்காட்சி
2020-தற்போது வரை ராஜா ராணி பருவம் 2 சிவகாமி விஜய் தொலைக்காட்சி

தொகுப்பாளராக பணியாற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://m.timesofindia.com/tv/news/malayalam/i-would-love-to-play-adhiparashakthi-again-praveena/amp_articleshow/62230016.cms
  2. പ്രവീണ സീരിയല്‍ അഭിനയം നിര്‍ത്തിയതിനു പിന്നില്‍? - Mangalam Retrieved 24 August 2013
  3. https://www.thehindu.com/entertainment/actress-praveena-on-returning-to-television-after-a-long-break/article22358688.ece
  4. "Kerala State Film Awards (Page 3)". Government of Kerala. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  5. "Kerala State Film Awards (Page 4)". Government of Kerala. Archived from the original on 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  6. "Five awards for Adoor's Oru Pennum Randanum". தி இந்து. 4 June 2009 இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090607091854/http://www.hindu.com/2009/06/04/stories/2009060454240100.htm. பார்த்த நாள்: 4 June 2009. 
  7. Pavithra Srinivasan (5 January 2011). "Praveena conquers Tamil TV". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  8. "Dileep, Shwetha make the cut". The Hindu. 2012-07-20. http://www.thehindu.com/todays-paper/article3660473.ece. 
  9. "On Record with:T.N.Gopakumar". asianetnews. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]