பிரவீன் கோர்தன் | |
---|---|
பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 பிப்ரவரி 2018 | |
குடியரசுத் தலைவர் | சிறில் ரமபோசா |
முன்னையவர் | லைன் பிரெளன் |
நிதி அமைச்சர் (தென் ஆப்பிரிக்கா) | |
பதவியில் 14 திசம்பர் 2015 – 31 மார்ச் 2017 | |
குடியரசுத் தலைவர் | யாக்கோபு சூமா |
Deputy | மெக்எபிசி ஜோனாஸ் |
பதவியில் 11 May 2009 – 25 மே 2014 | |
குடியரசுத் தலைவர் | யாக்கோபு சூமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரவீன் ஜம்னதாஸ் கோர்தன் 12 ஏப்ரல் 1949 டர்பன், தென்னாப்பிரிக்கா |
அரசியல் கட்சி | தென்னாப்பிரிக்க பொதுவுடமைக் கட்சி (2009 ஆம் ஆண்டிற்கு முன்னதாக) ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (2009–தற்போது வரை)[1] |
முன்னாள் கல்லூரி | டர்பன் பல்கலைக்கழகம் |
தொழில் | மருந்தியலாளர் |
பிரவீன் ஜம்னதாஸ் கோர்டன் (பிறப்பு: ஏப்ரல் 12, 1949 மற்றும் செப்டம்பர் 13, 2024 இல் இறந்தார்) ஒரு தென்னாப்பிரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் தென்னாப்பிரிக்கா அமைச்சரவையில் பல்வேறு அமைச்சக பதவிகளை வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராகவும், மீண்டும் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலும் கூட்டுறவு ஆளுகை மற்றும் பாரம்பரிய விவகார அமைச்சராகவும்,[2] மற்றும் பிப்ரவரி 2018 முதல் பொது நிறுவனத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் .
பிரவீன் கோர்தன் டர்பனில் பிறந்தார், 1967 ஆம் ஆண்டில் சாஸ்திரி கல்லூரியில் பதின்மக் கல்வியைப் பயின்றார். 1973 ஆம் ஆண்டில் டர்பன்-வெஸ்ட்வில் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மருந்தியல் பட்டம் பெற்றார்.[3] கோர்டன் 1971 ஆம் ஆண்டில் நடால் இந்திய காங்கிரசின் (என்ஐசி) உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டார் மற்றும் 1974 ஆம் ஆண்டில் அதன் நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1970 ஆம் ஆண்டுகளில், கோர்தன் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு மற்றும் தென்னாப்பிரிக்க பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அடிமட்ட அமைப்புகளை நிறுவ உதவினார். அவர் 1974 ஆம் ஆண்டில் கிங் எட்வர்ட் VIII மருத்துவமனையில் தனது மருந்தியல் பணிசார்ந்த உள்ளிருப்பு பயிற்சியினை முடித்தார். மேலும் 1981 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். அவர் காவலில் இருந்தபோது நடால் மாகாண நிர்வாகம் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக அவரை பணிநீக்கம் செய்தது. 1982 ஆம் ஆண்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், 1983 ஜூன் வரை தடை உத்தரவுகளைப் பெற்றார். 1983 ஆம் ஆண்டு கேப்டவுனில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தொடங்குவதில் கோர்தன் கலந்து கொண்டார். அங்கு நடால் இந்திய காங்கிரசும் ஒரு இணைந்த அமைப்பாக மாறியது.
ஒருங்கிணைந்த நடால் இந்திய காங்கிரசு/ டிரான்ஸ்வால் இந்திய காங்கிரஸ் (டி.ஐ.சி) பிரதிநிதியாக 1991 ஆம் ஆண்டில் ஜனநாயக தென்னாப்பிரிக்க (கோடெசா) மாநாட்டிற்கான ஆயத்த கூட்டத்தில் கோர்தன் கலந்து கொண்டார், மேலும் கோடெசா 1 ஐ ஒழுங்கமைக்கும் பொறுப்பான வழிநடத்தல் குழுவிற்கு என்.ஐ.சி / டி.ஐ.சி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் அவர் பல தரப்பு பேச்சுவார்த்தை செயல்முறையின் திட்டக் குழுவில் தலைவர் குழுவில் நியமிக்கப்பட்டார்.[4]
பிரவீன் கோர்தன் முன்னதாக 1999 முதல் 2009 வரை தென்னாப்பிரிக்க வருவாய் சேவை ஆணையராக இருந்தார்.[5] 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில், இவர் ஒரு ஜனநாயக தென்னாப்பிரிக்காவுக்கான மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார், மேலும் இடைக்கால செயற்குழுவின் இணைத் தலைவராகவும் இருந்தார், இது ஏப்ரல் 1994 இல் நாட்டின் முதல் இனமற்ற தேர்தலுக்கு தென்னாப்பிரிக்காவை தயார்படுத்தியது.[6] 1994 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோர்தன் புதிய அரசியலமைப்பின் செயலாக்கம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தார்.[7]
கோர்தன் 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை உலக சுங்க அமைப்பின் தலைவராக இருந்தார்.[5]
2009 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் அதிபர் ஜேக்கப் சுமா, டிரெவர் மனுவேலைத் தொடர்ந்து கோர்தனை தென்னாப்பிரிக்க நிதி அமைச்சராக நியமித்தார்.[8] 2014 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இவர் இன்லான்லா நேனே என்பவருக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[9]
2014 ஆம் ஆண்டில், கோர்தன் மரபுசார்ந்த வெளித்தொடர்பு மற்றும் கூட்டுறவு ஆளுகைத் துறையின் அமச்சராக நியமிக்கப்பட்டார்.[10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)