தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 5 சூன் 2001 தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | மும்முறை தாண்டுதல் | |||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 17.37 m (57.0 அடி) | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
12 பிப்ரவரி 2023 இற்றைப்படுத்தியது. |
பிரவீன் சித்திரவேல் (Praveen Chithravel) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். மும்முறை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்[1] 16.89 மீ தொலைவை தாண்டி நான்காவது இடத்தைப் பிடித்தார்.[2] இப்போட்டி நிகழ்விற்குச் சென்றதில் இவருடைய தனிப்பட்ட சிறந்த தாண்டல் 17.18 மீ (56.4 அடி) இருக்கிறது.[3] இவர் 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16.68 மீ நீளத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.