பிராங்கோ மூலக்கல்(Franco Mulakkal)[1][2][3][4][5][6] இவர் 2013-ஆம் ஆண்டு முதல் ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆக பணியாற்றியவர்.[7][8][9] இந்தியக் கத்தோலிக்க வரலாற்றில் முதன்முதலில் ஒரு கன்னியாஸ்திரியை கற்பழிப்பு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் கிறித்துவ ஆயர் ஆவார்.[10]
இவர் 21 ஏப்ரல் 1990-இல் கேரளாவின் திருச்சூர் மாவட்டம், மட்டோம் எனுமிடத்தில் உள்ள சைரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையில் பாதிரியாராகச் சேர்ந்தார்.[11]
பின்னர் இவர் 17 சனவரி 2000-இல் தில்லியின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 21 பிப்ரவரி 2009-இல் பிஷப் (ஆயர்) நிலைக்கு உயர்த்தப்பட்டார். 11 சூன் 2013-இல் ஜலந்தர் திருச்சபையின் ஆயராக நியமிக்கப்பட்டார்.[12][13]
சூன் 2018-இல் கேரளா மாநில கன்னியாஸ்திரீ ஒருவர், பிஷப் பிராங்கோ மூலக்கல், 2014 - 2016 இடைப்பட்ட ஆண்டுகளில் கோட்டயம் கன்னியாஸ்திரீ மடத்திற்கு வருகை தந்த போது, தன்னை 13 முறை கற்பழித்தாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.[14][15][16][17][18][19][20]
மேலும் மூன்று கன்னியாஸ்திரிகள், பிராங்கோ மூலக்கல் தங்களிடமும் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறினார்கள். இப்புகாரை கன்னியாஸ்திரிகளின் தலைமை கன்னியாஸ்திரியான மதர் சுப்பீரியர் மறுத்ததுடன், பிஷப் பிராங்கோ மூலக்கல் குற்றமற்ற அப்பாவி எனக்கூறி கன்னியாஸ்தீரிகளின் புகாரை மறுத்தார்.[21] இதன் பின்னர் 20 செப்டம்பர் 2018 அன்று பிராங்கோ மூலக்கல் தான் பிஷப் பதவியிலிருந்து விடுமுறையில் செல்வதாக போப்பாண்டருக்கு விண்ணப்பித்தார். இதனை போப்பும் ஏற்றுக் கொண்டார்.[22]
செப்டம் 2018-இல் கன்னியாஸ்திரியை கற்பழித்த வழக்கில் பிசப் பிராங்கோ மூலக்கல்லின் தொடர்புக்கு முதல்நிலை ஆதாரம் இருப்பதாக கருதிய கேரளா மாநில காவல் துறையினர் பிஷப் பிராங்கோ மூலக்கலை கொச்சியில் கைது செய்தனர்.[23][24][25][26]
நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்பட்ட பிஷப் பிராங்கோ மூலக்கல்லை, 20 அக்டோபர் 2018 வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் பிசப் பிராங்கோ மூலக்கல் முறையிட்டார்.[27] ஏப்ரல் 2019-இல் பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது, கன்னியாஸ்திரியை 9 முறை கற்பழித்தாக குற்றம் சாட்டப்பட்டார்.[28] ஒரு கர்தினால், மூன்று பிஷப்புகள், 11 பாதிரியார்கள், 25 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 80 சாட்சிகளின் குழுவினர் கேரளாவில் கிறித்துவ அருட்சகோதரிகளை காக்க, பிஷப் பிராங்கோ மூலகல்லுக்கு எதிராக அறிக்க விட்டனர்.[28]
பிராங்கோ மூலக்கல் தன்னை கற்பழிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஆகத்து 2020-இல் கேரளா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை கேரளா உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே மூலக்கல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 2020-இல் முறையிட்டார். அங்கும் இவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.[29] எனவே பிராங்கோ மூலக்கல் மீதான கற்பழிப்பு வழக்கு செப்டம்பர் 2020 முதல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.[30]
நீதிமன்றத் தீர்ப்பும், மீண்டும் இறைப்பணிக்கு திரும்புதலும்
14 சனவரி 2022 அன்று கேரளா நீதிமன்றம், கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பிராங்கோ குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுதலை செய்தது.[31]எனவே 12 சூன் 2022 அன்று பிராங்கோ மூலக்கல் மீண்டும் இறைப்பணிக்கு திரும்பினார்.[32]