பிராங்கோயிசு பெட்டிசு டி லா குரோயிக்சு (1653–1713) என்பவர் ஒரு பிரெஞ்சு கிழக்கியலாளர் ஆவார். இவர் பாரிசில் பிறந்தார். இவரது தந்தை பெயரும் பிராங்கோயிசு பெட்டிசு டி லா குரோயிக்சு (1622-1695)[1] தான். இவரது தந்தை பிரெஞ்சு அவையில் அரபு மொழிபெயர்ப்பாளராகவும் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். தந்தை இறந்த பிறகு இவர் அந்தப் பதவிக்கு வந்தார். பிறகு தனது மகன் அலெக்சாந்தர் லூயிசு மேரிக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார். இவரது மகனும் ஒரு குறிப்பிடத்தகுந்த கிழக்கியலாளர் ஆனார். இளம் வயதிலேயே இவரை பிரெஞ்சு முதல் மந்திரி கோல்பர்ட்டு கிழக்குப் பகுதிக்கு அனுப்பினார். சிரியா, பாரசீகம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இவர் இருந்த 10 ஆண்டுகளில் அரபி, பாரசீகம் மற்றும் துருக்கி ஆகிய மொழிகளைக் கற்றார்.
1710ஆம் ஆண்டு செங்கிஸ் கானைப் பற்றி தனது தந்தை எழுதிய சிறந்த சுயசரிதையான, மகா செங்கிஸ்கானின் வரலாறு, பண்டைய முகலாயர்கள் மற்றும் தாதர்களின் முதல் பேரரசர்[2] என்கிற புத்தகத்தை இவர் தொகுத்துப் பதிப்பித்தார். இப்புத்தகம் 1722ஆம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இப்புத்தகத்தை அமெரிக்கக் காலனிகளில் பிரபலமானதாக பெஞ்சமின் பிராங்கிளின் ஆக்கினார். தாமசு செபர்சனின் சமய சகிப்புத்தன்மைக்கான விர்சினியா சிலை நிறுவப்பட்டதில் இப்புத்தகம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[1]