பிராத்தமேசு சுனில் மோகல் Prathamesh Sunil Mokal | |
---|---|
முழுப் பெயர் | பிராத்தமேசு சுனில் மோகல் |
நாடு | Iஇந்தியா |
பிறப்பு | 1 அக்டோபர் 1983 பூனா, மகாராட்டிரா, இந்தியா |
பட்டம் | அனைத்துலக சதுரங்க மாசுட்டர் (2003) |
பிடே தரவுகோள் | 2393 |
பிராத்தமேசு மோகல் (Prathamesh Mokal) ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் நாள் பிறந்தார். சதுரங்க அனைத்துலக மாசுட்டர், பிடே அமைப்பின் பயிற்சியாளர், கராத்தே விளையாட்டில் கருப்பு பட்டை வாங்கியவர் என்ற பல பெருமைகள் இவருக்கு உண்டு. சதுரங்கத்தில் இவரது சாதனைகளைப் பாராட்டி மகாராட்டிர அரசு இவருக்கு சிவ சத்ரபதி பதக்கம் வழங்கி சிறப்பித்தது. புனேயில் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டி 2014 இல் நடந்தபோது நேரலை இணைய காணொளி வர்ணனையின் ஒரு பகுதியாக இவர் இருந்தார்[1][2][3]. மிக பிரபலமான தொழில்முறை சதுரங்க விளையாட்டு மென்பொருள் செசு பேசு 13 எனப்படும் சதுரங்க அடிப்படை 13 இன் சமீபத்திய பதிப்பை பிரதாமேசு விமர்சனம் செய்தார்[4]. இம்மென்பொருளின் சில அடிப்படை செயல்பாடுகள் சிலவற்றை விவரிக்கும் போது ஒரு பயிற்சியாளரின் பார்வையுடன் விமர்சனத்தை அளிப்பது இவருடைய சிறப்பு ஆகும். மேலும் இவர் அல் ஐன் சதுரங்கப் போட்டி குறித்து சாகர் சா எழுதிய கட்டுரைகளை சுட்டிக்காட்டியும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்[5].
2014 ஆம் ஆண்டு பூனேயில் [12][13] நடைபெற்ற மகாராட்டிர சதுரங்க லீக் போட்டியில் மும்பை மூவர்சு அணிக்கு இவர் பயிற்சியாளராக இருந்தார் [14][15]. 2014 ஏப்ரல், மே மாதங்களில் சிங்கப்பூரில் [16][17][18][19] நடைபெற்ற உலக தொழிற்முறை சாம்பியன் பட்டப் போட்டியில் இவருடைய மாணவி சலோனி சபேல் என்ற என்ற பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார் [20].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)