பிரான்சிசு சார்லசு பிரேசர்

பிரான்சிசு சார்லசு பிரேசர்
பிறப்பு(1903-06-16)சூன் 16, 1903
இறப்புஅக்டோபர் 21, 1978(1978-10-21) (அகவை 75) [1]
பணியிடங்கள்இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்
அறியப்படுவதுபிரேசர் டால்பின்
விருதுகள்ராயல் கழக உறுப்பினர்[1]

பிரான்சிசு சார்லசு பிரேசர் (Francis Charles Fraser) கடல்வாழ் கடற்பாலூட்டிகள் குடும்பத்தைச் சேர்ந்த திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்ட முதன்மை விலங்கியலாளர் ஆவார். 1903 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் நாள் இவர் பிறந்தார். 1933 முதல் 1969 வரை பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். 1966 ஆம் ஆண்டு ராயல் கழகத்தின் உறுப்பினராக பிரேசர் தேந்தெடுக்கப்பட்டார். [1] 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் பிரேசர் காலமானார்.

பிரான்சிசு சார்லசு பிரேசருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் டால்பின் இனம் ஒன்றுக்கு பிரேசர் டால்பின் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Marshall, N. B. (1979). "Francis Charles Fraser. 16 June 1903-21 October 1978". Biographical Memoirs of Fellows of the Royal Society 25: 287–317. doi:10.1098/rsbm.1979.0010.