கே. பிரான்சிசு ஜார்ஜ் Francis George | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | தாமசு சாழிகடன் |
தொகுதி | கோட்டயம் |
பதவியில் 1999 –2009 | |
முன்னையவர் | பி. சி. சாக்கோ |
பின்னவர் | பி. டி. தாமஸ் |
தொகுதி | இடுக்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 மே 1955 மூவாற்றுப்புழை, கோட்டயம், திருவாங்கூர் கொச்சி மாநிலம் (நவீன கேரளம்), இந்தியா |
இறப்பு | இந்திய மக்களவை உறுப்பினர் |
அரசியல் கட்சி | கேரள காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனாதிபதியா கேரள காங்கிரசு[1] (முன்னர்) கேரள காங்கிரசு (எம்) (முன்னர்) |
துணைவர் | சைனி பிரான்சிஸ் ஜார்ஜ் |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | மூவாற்றுப்புழை |
இணையத்தளம் | http://www.francisgeorge.in |
மூலம்: [1] |
கே. பிரான்சிஸ் ஜார்ஜ் (K. Francis George) ஓர் இந்திய அரசியல்வாதியான இவர் கேரள காங்கிரசு கட்சி உறுப்பினராக உள்ளார். தற்போது கோட்டயம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18வது மக்களவையில் உறுப்பினராக உள்ளார்.[2] கேரளாவின் இடுக்கி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பதின்மூன்றாவது மற்றும் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் முன்பு கேரள காங்கிரசு (எம். ஐ. ஏ) மற்றும் தனது முன்னாள் கட்சியான ஜனதிபதியா கேரள காங்கிரசின் தலைவராக இருந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இவர் கேரள காங்கிரசை விட்டு வெளியேறி, ஜனாதிபதியா கேரள காங்கிரசு என்ற புதிய கட்சியை உருவாக்கினார். இந்தக் கட்சி இடதுசாரி ஜனநாயக முன்னணியுடன் இணைந்தது. மேலும் இவர் 2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும் தேர்தலில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரோஷி அகஸ்டைனிடம் தோல்வியடைந்தார். 2020 ஆம் ஆண்டில், இவர் ஜனாதிபதியா கேரள காங்கிரசை விட்டு வெளியேறி மீண்டும் கேரள காங்கிரசில் சேர்ந்தார். 2021 தேர்தலில் இடுக்கி தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் மீண்டும் ரோஷி அகஸ்டினிடம் தோல்வியடைந்தார்.[3]
பிரான்சிஸ் ஜார்ஜ், வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்றக் குழுக்களில் இருந்துள்ளார். கோட்டயம் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார்.
பிரான்சிஸ் பெங்களூரில் உள்ள கிறிஸ்து கல்லூரியில் பட்டம் பெற்றார். திருவனந்தபுரத்தில் உள்ள சட்ட அகாதமியில் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார். முன்பு வங்கியாளராகவும் இருந்தார்.
இவர் கேரள காங்கிரசு கட்சியின் நிறுவனர் கே. எம். ஜார்ஜின் மகன் ஆவார். பிரான்சிஸ் ஜார்ஜ் சைனி செட்டிசெரில் என்பவரை மணந்தார். இவர்களுக்கு கே. எஃப். ஜார்ஜ், கே. எஃப் ஜோஸ் மற்றும் கே. எஃப் ஜேக்கப் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.