பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
பண்புகள் | |
FrCl | |
வாய்ப்பாட்டு எடை | 258.45 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 590 °C (1,094 °F; 863 K) |
கொதிநிலை | 1,275 °C (2,327 °F; 1,548 K) |
கரையும் | |
ஆவியமுக்கம் | 23.90 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரான்சியம் ஐதராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் குளோரைடு சோடியம் குளோரைடு பொட்டாசியம் குளோரைடு ருபீடியம் குளோரைடு சீசியம் குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரான்சியம் குளோரைடு (Francium chloride) FrCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கதிரியக்கப்பண்பு கொண்ட இச்சேர்மம் வெண்மை நிறம் கொண்ட ஒரு திண்மமாக இருக்கும் எனவும் நீரில் கரையும் எனவும் முன்கணிக்கப்பட்டுள்ளது. சீசியம் குளோரைடின் பண்புகளை ஒத்ததாக பிரான்சியம் குளோரைடின் பண்புகள் இருக்கும்.[1]
பிரான்சியம் உலோகத்துடன் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் பிரான்சியம் குளோரைடு உருவாகிறது:[1]
பிரான்சியம் உலோகத்துடன் நேரடியாக குளோரின் வாயுவைச் சேர்த்தாலும் பிரான்சியம் குளோரைடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வினை தீவிரமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.[2]