தி பிராபோர்ன் | |
![]() | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | சர்ச்சுகேட்டு, மும்பை |
உருவாக்கம் | 1937 |
இருக்கைகள் | 30,000[1] |
உரிமையாளர் | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
குத்தகையாளர் | மும்பைத் துடுப்பாட்ட அணி, மும்பை இந்தியன்ஸ் |
முடிவுகளின் பெயர்கள் | |
கூடார முனை சர்ச்சுகேட்டு முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 9–13 திச 1948:![]() ![]() |
கடைசித் தேர்வு | 2–6 திச 2009:![]() ![]() |
முதல் ஒநாப | 23 அக் 1989:![]() ![]() |
கடைசி ஒநாப | 5 நவ 2006:![]() ![]() |
ஒரே இ20ப | 20 அக் 2007:![]() ![]() |
5 மார் 2011 இல் உள்ள தரவு மூலம்: ESPNcricinfo |
பிராபோர்ன் விளையாட்டரங்கம் (Brabourne Stadium) இந்திய பெருநகரம் மும்பையிலுள்ள ஓர் துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். இந்த மைதானத்திற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) உரிமையாளராக உள்ளது. பிராபோர்ன் விளையாட்டரங்கமே இந்தியாவின் முதல் நிலைத்த கட்டுமானம் கொண்ட விளையாட்டு அரங்கமாகும். 2006ஆம் ஆண்டு வரை இதன் வடக்கு அமர்பகுதியில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் (BCCI) தலைமையகமும் 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ண கோப்பையும் இங்கு அமைந்திருந்தது. இவை இரண்டுமே 2006இல் புதியதாகக் கட்டப்பட்ட வான்கேடே அரங்கத்தில் உள்ள துடுப்பாட்ட மையத்திற்கு மாற்றப்பட்டன.
இந்த விளையாட்டரங்கத்தில் 1948 முதல் 1972 வரை தேர்வுத் துடுப்பாட்டங்கள் ஆடப்பட்டன. இதற்கு முன்னதாக 1937 முதல் 1946 வரை மும்பை பென்டாங்குலர் ஆட்டங்கள் நடந்து வந்தன. சிசிஐயுடனான நுழைவுச்சீட்டு குறித்த சர்ச்சைக்குப் பின்னர் மும்பை துடுப்பாட்ட சங்கம் (BCA) புதிய வான்கேடே அரங்கத்தைக் கட்டியது. இதன்பிறகு தேர்வுத் துடுப்பாட்டங்கள் இங்கு நடைபெறவில்லை. சில முதல்தர துடுப்பாட்ட போட்டிகள் வருகை புரியம் அணிகளுடன் விளையாடப்பட்டது. துடுப்பாட்டத்தைத் தவிர இங்கு டென்னிசு போட்டிகளும் காற்பந்தாட்ட போட்டிகளும் இசை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அண்மையில், மீண்டும் பன்னாட்டுத் துடுப்பாட்ட விளையாட்டுக்கள் இங்கு நடத்தப்படுகின்றன. 2006ஆம் ஆண்டில் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்க்கான விளையாட்டுக்களும் 2007இல் முதல் இருபது20 பன்னாட்டுப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளன. மீண்டும் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் 2009இல் விளையாடப்பட்டது. இந்தியன் பிரீமியர் லீக்கின் மூன்றாவது பதிப்பில் 2010இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தாய் மைதானமாக இருந்தது.