நாடு | இந்தியா | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
தொழில் ஆரம்பம் | 2012 | |||||||
விளையாட்டுகள் | வலது-கையாளர், இரு-கை பின் கையாட்டம் | |||||||
பரிசுப் பணம் | $28,735 | |||||||
ஒற்றையர் போட்டிகள் | ||||||||
சாதனைகள் | 70 - 56 | |||||||
பட்டங்கள் | 5ஐடிஎப் | |||||||
அதிகூடிய தரவரிசை | எண்.209 (25 ஆகத்து 2014) | |||||||
தற்போதைய தரவரிசை | எண். 471 (19 சனவரி 2015) | |||||||
இரட்டையர் போட்டிகள் | ||||||||
சாதனைகள் | 72 - 54 | |||||||
பட்டங்கள் | 10 ஐடிஎப் | |||||||
அதியுயர் தரவரிசை | எண். 274 (8 திசம்பர் 2014) | |||||||
தற்போதைய தரவரிசை | எண். 274(19 சனவரி 2015) | |||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||
இற்றைப்படுத்தப்பட்டது: 19 சனவரி 2015. |
பிரார்த்தனா தொம்பாரே (Prarthana Thombare, 18 சூன் 1994) இந்தியப் பெண் டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார்.
தொம்பாரே தனது ஐடிஎப் விளையாட்டுக்காலத்தில் மூன்று ஒற்றையர், ஏழு இரட்டையர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆகத்து 25, 2014இல் உலகளவில் ஒற்றையரில் தனது மீச்சிறந்த தரவரிசையாக 335ஐ எட்டினார். திசம்பர் 8, 2014இல் இரட்டையரில் மீச்சிறந்த தரவரிசை எண் 325ஐ எட்டினார்.
ஃபெட் கோப்பையில் இந்திய அணிக்காக ஆடும் தொம்பாரேயின் வெற்றி-தோல்வி 6- 1 என்ற கணக்கில் உள்ளது.
2014ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளின் டென்னிசில் சானியா மிர்சாயுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் வெங்கலப் பதக்கம் வென்றார்.[1][2][3][4]
2016ஆம் ஆண்டில் இரியோ டி செனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் டென்னிசு மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா மிர்சாயுடன் இணைந்து பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]