புவா ஆலா(பிரிகாமியா ராக்கி) | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. rockii
|
இருசொற் பெயரீடு | |
Brighamia rockii H.St.John |
பிரிகாமியா ராக்கி (தாவர வகைப்பாட்டியல்: Brighamia rockii) என்பது, ஹவாய் மொழியில் மோலோகாய் ஓஹா அல்லது புவா ஆலா என்று அழைக்கப்படும், பெல்ஃப்ளவர் குடும்பமான காம்பானுலேசி இனத்தை சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். ஹவாயில் உள்ள மோலோகாய் தீவுக்கு சொந்தமான இத்தாவரம், புவா தீவின் வடக்கு காற்று வீசும் கடற்கரையில் கடல் மட்டத்திலிருந்து 470 மீ (1,540 அடி) வரையுள்ள பாறைகளில் உள்ள புதர் நிலங்கள் மற்றும் காடுகளில் போன்றவைகளில் வாழ்கிறது.
இத்தாவரமானது, 1–5 மீ (3.3–16.4 அடி) உயரம் கொன்ட தண்டுகளும், சதைப்பற்றுள்ள, முட்டை வடிவ 6–22 செ.மீ (2.4–8.7 அங்குலம்) நீளமும் 1–15 செ.மீ (0.39–5.91 அங்குலம்) அகலமும் கொண்ட இலைகளையும் கொண்டு, தாவரத்தின் மேற்புறத்தில் ஒரு வட்ட அமைப்பை உருவாக்குகின்றன.[2] ஒவ்வொரு மஞ்சரியிலும் மூன்று முதல் எட்டு எக்காள வடிவ வெள்ளை மலர்கள் அமைந்துள்ளன.
லானாய் மற்றும் மௌய் போன்ற தீவுகளில் இருந்து இத்தாவரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. வாழ்விட இழப்பு, அன்னிய தாவரங்களுடனான போட்டி, ஆடுகள் மற்றும் மான்களால் உண்ணப்படுதல் மற்றும் மகரந்தச் சேர்க்கையாளர்களின் பற்றாக்குறை ஆகியவை இதன் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல் காரணங்களாகும்.
காடுகளில் ஐந்து இடங்களில் இத்தாவரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.மொத்த எண்ணிக்கை 200 க்கும் குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3] எனவே அருகிவரும் இனமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட பருந்து அந்துப்பூச்சி டாப்னிஸ் நேரி என்பதன் மூலம் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகிறது.
சில ஆர்வமுள்ள தனிநபர்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களில் இத்தாவரத்தைப் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.[4]