பிரிசில்லா பேர்பீல்டு போக் Priscilla Fairfield Bok | |
---|---|
பிறப்பு | ஏப்பிரல் 14, 1896 |
இறப்பு | நவம்பர் 1975 (அகவை 79) |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | மவுண்ட் சுட்டிரோம்லோ வான்காணகம் |
அறியப்படுவது | விண்மீன் கொத்துகள், பால்வழி |
பிரிசில்லா பேர்பீல்டு போக் (Priscilla Fairfield Bok) (ஏப்பிரல் 14, 1896 – நவம்பர் 1975[1]) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பார்ட் போக் எனும் டச்சு வானியலாளரின் மனை ஆவார். இவர் ஆட்டிரேலியாவில் உள்ள மவுண்ட் சுட்டிரோம்லோ வான்காணக இயக்குநரும் ஆவார். பின்னர், அமெரிக்கா, அரிசோனாவில் உள்ள சுட்டீவார்டு வான்காணக இயக்குநரானார். நான்கு பத்தாண்டுகளாக கணவரும் மனைவியுமாக நெருக்கமான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தமையால் இவரகளது சாதனைகளைத் தனியாக பிரிக்கமுடியாது.[2] இவர்கள் இணையாக விண்மீன் கொத்துகளைப் பற்றியும் விண்மீன் ஒளிப்பருமை பற்றியும் பால்வழியின் கட்டமைப்பு பற்றியும் பல ஆய்வுக் கட்டுறைகளை எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு வானியலை விளக்குவதில் அளவுகடந்த ஆர்வம் இருந்தது. எனவே இவர்கள் பால்வழி விற்பனையாளர்கள்" என The Boston Globe அமைப்பு, இவர்களது The Milky Way எனும் பொது ஆர்வநூல் பல படிகள் விற்றதால் அழைத்தது. "இந்த நூல் வானியல் நூல்கள் அனைத்தினும் அரிய வெற்றிகண்ட நூலாகும்".