பிரிஜிட் பாப்டிஸ்ட் | |
---|---|
![]() | |
பிறப்பு | லூயிஸ் கில்லர்மோ பாப்டிஸ்ட் அக்டோபர் 23, 1963 பொகோட்டா, கொலம்பியா |
தேசியம் | கொலம்பியர் |
துறை | சூழலியல் |
பணியிடங்கள் | இயான் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
பிரிஜிட் பாப்டிஸ்ட் (Brigitte Baptiste) (பிறப்பு லூயிஸ் கில்லர்மோ பாப்டிஸ்ட் (Luis Guillermo Baptiste[1] அக்டோபர் 23,1963) கொலம்பியாவைச் சேர்ந்த ஓர் கலாச்சார நிலத்தோற்ற வாழ்சூழலியல் நிபுணரும் மற்றும் கொலம்பியாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் உயிரியற் பல்வகைமை நிபுணரும் ஆவார்.[1] இவர் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் குறித்த அரசுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் கொள்கை தளத்தின் பலதரப்பட்ட நிபுணர் குழுவில் உறுப்பினராக உள்ளார். உலகளாவிய மாற்றத்திற்கான அமெரிக்க நிறுவனத்திற்கான தேசிய பிரதிநிதித்துவத்தின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறார்.[2] இவர் 2011 முதல் 2019 வரை அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் உயிரியல் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். செப்டம்பர் 2019 இல், பாப்டிஸ்ட் யுனிவர்சிடாட் ஈனின் இயக்குநரானார்.[3] வினோதமான சூழலியல் மற்றும் சூழலியல் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்று இவர் கருதுகிறார்.
பிரிஜிட் பாப்டிஸ்ட் இலாப நோக்கற்ற அமைப்பிலும் மற்றும் கல்வி துறைகளிலும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். 1982 ஆம் ஆண்டில் ஒரு மாணவராக, இவர் சுற்றுச்சூழல் இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்பான கார்ப்பரேஷன் குரோபோ எகோலோஜிகோ ஜிஇஏவை நிறுவினார். பின்னர் 1984 முதல் 1991 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார். 1991 முதல் 1996 வரை, பொண்டிஃபிக்கல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது அம்பியன்ட் ஒய் டெசாரோலோ என்ற புத்தகத்தை தொகுத்தார். 1996 க்குப் பிறகு, இவர் ஹம்போல்ட் நிறுவனத்தில் பல்லுயிர் பயன்பாடு மற்றும் மதிப்பீட்டிற்கான திட்டத்தை ஒருங்கிணைத்தார் மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் உட்பட பல இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினார். உதவி பேராசிரியராக கற்பிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் 2002 முதல் 2009 வரை பொண்டிஃபிக்கல் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார்.[4] இவர் 2011 முதல் 2019 வரை அம்போல்ட் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் (2015–2017) சார்பாக 25 நிபுணர்களைக் கொண்ட அதன் உலகளாவிய குழுவின் உறுப்பினராக, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவில் அவர் பணியாற்றுகிறார். அங்கு, உள்நாட்டு மற்றும் உள்ளூர் அறிவு, கொள்கை கருவிகள் மற்றும் முறைகள் குறித்த பணிக் குழுக்களுக்கு இவர் இணைத் தலைவராக உள்ளார். இதைத் தவிர இவர் அறிவியல் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் உலகளாவிய திட்டத்தின் அறிவியல் குழு, சுற்றுச்சூழல் அமைப்பு மாற்றம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.[5] கொலம்பிய உள்நாட்டுப் போரில் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்காக வாதிடும் ஒரு முக்கிய குரலாக இவர் இருந்தார்.
இவரது கல்வி நோக்கங்களுடன் கூடுதலாக, பிரிஜிட் பாப்டிஸ்ட், அமெரிக்காவின் இதழில் வெளியான லத்தீன் அமெரிக்காவின் “தபூ” அத்தியாயத்தில் இடம்பெற்றார்.[6] இவர் பொருளாதார செய்தித்தாளான லா ரிபப்ளிக்காவிலும் ஒரு கட்டுரையாளராகவும் உள்ளார்.[7]
இவரது வாழ்க்கைப் பற்றி எசுப்பானிய மொழியில் “பிரிஜிட் பாப்டிஸ்ட்ஃ அன் ஹோமனஜே இலுஸ்ட்ராடோ” என்ற புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.[8]
பாப்டிஸ்ட், அட்ரியானா வாஸ்குவேசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு கேண்டெலாரியா மற்றும் ஜூனா பாசியோன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[9][10]
டிசம்பர் 2024 இல், பிபிசியின் “உத்வேகமளிக்கும் 100 பெண்கள்” பட்டியலில் பிரிஜிட் பாப்டிஸ்ட் சேர்க்கப்பட்டார்.