தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1974 Jharsa, Gurgaon | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பிரிதம் ராணி சிவாச் (பிறப்பு: அக்டோபர் 2, 1974) இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன். [1] 2008 ஆம் ஆண்டில், "அனுபவத்தின் கூடுதல் பலனை” பெறுவதற்காக வருவதற்காக ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான அணியில் சேர அவர் திரும்ப அழைக்கப்பட்டார். [2] அணி ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறாத பிறகு, சிவாச் ஒரு நேர்காணலில், "முடிவுகள் காண்பிக்கும் அளவுக்கு நாங்கள் மோசமாக இல்லை. இது வெறுமனே தவறவிட்ட வாய்ப்புகளின் ஒரு சந்தர்ப்பமாகும் [. . . ] எனது காலத்திற்கும் இப்போதுக்கும் இடையிலான ஒரு வித்தியாசம் உள்ளது. மையத்தில் சீதா குசேனுடன் அனுபவம் வாய்ந்த மிட்ஃபீல்ட் இருந்தது. அது எங்களுக்கு உதவியது. இங்கே, டி.எச்.ரஞ்சிதா மற்றும் ரோசாலிந்த் ரால்டே இருவரும் இளந்துடிப்போடு இருக்கிறார்கள். அணிக்குள் தற்போதுதான் வந்துள்ளார்கள். அவர்கள் சாத்தியமான இளைஞர்கள், மேம்படுவார்கள். " என்றார்.
ஹரியானாவின் குர்கானுக்கு அருகிலுள்ள ஜார்சா கிராமத்தில் பிறந்த பிரிதம் தனது 9 வயதில் ஹாக்கி விளையாடத் தொடங்கினார். ஜார்சா பள்ளியில் பி.டி.ஐ மாஸ்டர் தாரா சந்தின் வழிகாட்டுதலில் அவர் தனது ஹாக்கி விளையாடும் திறனை வளர்த்துக் கொண்டார். மாஸ்டர் தாரா சந்த் மற்றும் தலைமை மாஸ்டர் ராக்வேந்திர சிங் யாதவ் ஆகியோர் வழிகாட்டுதலால் ஹாக்கியின் சிறந்த வீரராக உருவெடுத்தார் பிரிதம்.
பிரிதம் ராணி சிவாச் இப்போது உலகக் கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணியுடன் பயிற்சியாளராக உள்ளார்.