அந்தோனி சூசைரெத்தினம் பிறிமுஸ் சிராய்வா S. R. P. Sraiva | |
---|---|
மன்னார் மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பேசாலை, மன்னார் மாவட்டம், இலங்கை | நவம்பர் 24, 1973
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
அந்தோனி சூசைரெத்தினம் பிரிமுஸ் சிராய்வா (Anthony Soosai Ratnam Pirimus Sraiva, பிறப்பு: 24 நவம்பர் 1973) என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.
சிராய்வா 2013 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக]]ப் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 12,927 விருப்பு வாக்குகள் பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக வந்தார். இவர் 2013 அக்டோபர் 11 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் 1வது வட மாகாண சபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.[3][4]
இவர் காவல்துறை, மற்றும் பொதுப் பாதுகாப்புத் தொடர்பாக முதலமைச்சருக்கு ஆலோசகராக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டார்.[5]