பிரியங்கா நாயர் | |
---|---|
பிறப்பு | 30 சூன் 1985 வாமனபுரம், திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2000 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | இலாரன்சு ராம் (தி. 2012) |
பிள்ளைகள் | 1 |
பிரியங்கா நாயர் (Priyanka Nair) (பிறப்பு 30 சூன் 1985) இந்திய விளம்பர நடிகையான இவர் மலையாளத் திரையுலகில் முக்கியமாக பணியாற்றுகிறார்.[1] இவர் 2006 ஆம் ஆண்டில் வெளியான வெயில் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2] பூமி மலையாளம், விலபங்கல்கப்புரம் மற்றும் ஜலாம் ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.[3]
பிரியங்கா தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான இலாரன்சு ராம் என்பவரை என்பவரை]] 23 மே 2012 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.[4] இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற ஒரு மகன், 18 மே 2013 அன்று பிறந்தார்.[5] இந்த இணை 2015 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது.[6]
பிரியங்கா தனது மேல்நிலைக் கல்வியை முடித்து திருவனந்தபுரத்தின் மார் இவானியோசு கல்லூரியில் இயற்பியல் பயின்றார்.[7] இந்த காலகட்டத்தில், ஊமக்குயில், மேகம், ஆகாசதூது போன்ற மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் பகுதிநேர நடிப்பில் இருந்தார்.[8] தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை "நேர விரயம்" என்று கருதினார். மேலும் ஒருபோதும் படங்களில் நடிக்க விரும்பவில்லை. மாறாக ஒரு விரிவுரையாளராக விரும்பினார்.
இயக்குநர் சங்கர் தயாரித்திருந்த இயக்குநர் வசந்தபாலன் இயக்கியிருந்த வெயில் (2006) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார. அதில் இவர் பசுபதியுடன் நடித்திருந்தார்.[9] இவரது முதல் மலையாளத் திரைப்படம் கிச்சாமணி எம்பிஏ (2007), ஒரு இவருக்கு துணை வேடமாக இருந்தது. அடுத்த ஆண்டில் இவர் டி. வி. சந்திரனின் விலபங்கல்கப்பூரம் என்ற படத்தில் சுஹாசினியுடனும், பிஜு மேனனுடன் நடித்தார். இதில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.[10] ரெடிப்.காம் 2009 ஆம் ஆண்டின் சிறந்த மலையாள நடிகை என்று பெயரிட்டது.[11] இவிடம் ஸ்வர்கமணு என்ற படத்தில் மோகன்லாலுக்கு இணையாக தோன்றிய பின்னர் இவர் பிரபலமடைந்தார். பிரியங்கா தனது இராயல் என்ஃபீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை விரும்புகிறார்.[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)