பிரீத் | |
---|---|
வகை | குற்றம் நாடகம் திரில்லர் |
கதை | மாயங்க் சர்மா அலோகானந்த தாஸ்குப்தா |
இயக்கம் | மாயங்க் சர்மா |
நடிப்பு | மாதவன் அமித் சாத் ஹிருஷிகேஷ் ஜோஷி சப்னா பப் அதர்வ விஸ்வகர்மா |
இசை | அலோகானந்த தாஸ்குப்தா |
நாடு | இந்தியா |
மொழி |
|
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 8 (list of episodes) |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | விக்ரம் மல்ஹோத்ரா |
ஓட்டம் | 36-60 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | அபுதான்டியா எண்டர்டெயின்மென்ட் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | அமேசான் பிரைம் வீடியோ |
ஒளிபரப்பான காலம் | 26 சனவரி 2018 |
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் |
பிரீத் என்பது ஓர் இந்திய குற்ற நாடக திரில்லர் வலை தொலைக்காட்சி தொடர்.[1] இது அமேசான் வீடியோவில் 26 ஜனவரி 2018 அன்று திரையிடப்பட்டது.[2][3] இது அமேசான் பிரைம் வீடியோவின் 2017 இன் இன்சைட் எட்ஜுக்குப் பிறகு இரண்டாவது இந்திய அசல் தொடராகும். இந்தத் தொடரில் ஆர்.மாதவன், அமித் சாத், ஹிருஷிகேஷ் ஜோஷி, சப்னா பப், அதர்வ விஸ்வகர்மா மற்றும் நீனா குல்கர்னி ஆகியோர் நடித்திருந்தனர் .[4][5] இத்தொடரின் தொடர்ச்சியாக அபிஷேக் பச்சன் நடித்த ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் என்பது வெளியானது. இதன் தொடர்ச்சி ஜூலை 10, 2020 இல் வெளியானது.[6][7]
நுரையீரல் பாதிப்பால் உறுப்பு தானம் பெற காத்திருக்கும் மகனுக்காக கொலை செய்ய துணிகிறார் ஒரு தந்தை. இரண்டு கொலைகளை துப்பறியும் காவலருக்கு உறுப்பு தானத்திற்காகவே கொலை நடப்பது புரிகிறது. அந்தப் பட்டியலில் காவலரின் மனைவியும் இருக்கிறார். கொலையாளிக்கும் காவலருக்குமிடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டமே கதை.[8]
பிரீத் தொடர் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
அமித் சாத், அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்த ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் என்ற தொடர் ஜூலை 10, 2020 அன்று பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது.[10]
இந்துஸ்தான் டைம்ஸில் ரோஹன் நஹார் கூறுகையில், "மாதவன் மற்றும் அமேசான் இணைந்து தொலைக்காட்சியில் ஒற்றை வித்தியாசமான நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர், இது கெய்கோ ஹிகாஷினோவின் பிரபலமான நாவல்களில் ஒன்றின் தழுவல் போன்றது." என்றார்.[11]
{{cite web}}
: |last=
has generic name (help)