பிரீத்தா ரெட்டி Preetha Reddy | |
---|---|
![]() | |
தேசியம் | ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுடெல்லா மேரிக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி | துணை தைலைவர், அப்போலோ மருத்துவமனை |
உறவினர்கள் |
|
பிரீத்தா ரெட்டி (Preetha Reddy) சென்னையில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராக உள்ளார்[1].
இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.[2] வளர்ந்த பிறகு, பிரீத்தா தனது தந்தையின் மருத்துவமனைக்குச் சென்று அவருடன் பணிகளை பகிர்ந்து கொண்டார்.[3] கல்லூரியில் படிக்கும் போதே அவர் தனது கணவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியுமாறு இவரை அழைத்தார்.[4]
பிரீத்தா, 1989 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். இவரது வழிகாட்டுதலின் கீழ், மருத்துவமனையின் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டு தரச் சான்றிதழ் பெறப்பட்டது.[3] 2012 இல், இவர் மெட்ரானிக் என்ற மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரீத்தா தனது தந்தைக்குப் பிறகு அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவரானார்.[6]
இவருக்கு சுனிதா ரெட்டி, சங்கீதா ரெட்டி மற்றும் சோபனா காமினேனி ஆகிய மூன்று சகோதரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைகளில் இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்தக் குடும்பம் 34 சதவீத நிறுவனப் பங்குகளை கொண்டுள்ளனர்.[7][8]