பிருந்தா சிவக்குமார் (பிறப்பு: 1980) திரையுலகில் பாடகியாகவும் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளார். இவர் நடிகர் சிவக்குமாரின் மகளும், சூரியா கார்த்திக்கின் தங்கையும் ஆவார். 2005ஆம் ஆண்டு கருங்கல் தொழிலபதிரான சிவக்குமார் என்பவரை மணமுடித்தார்[1]. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக் ராசா பாட அழைத்த போது முழு ஆண்டுத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளதென்று அவ்வாய்ப்பை மறுத்துவிட்டார். [2] இவர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனில் இறை வணக்க பாடலை பாடியதை கேட்ட இவர்களின் குடும்ப நண்பரும் படத்தயாரிப்பாளருமான தனஞ்செயன் தன் படத்தில் பாடுமாறு அழைத்தார்.[3] முதல் முதலாக மிசுடர். சந்திரமௌலி என்ற படத்தில் பாடகியாக அறிமுகமானார்.[4] இவர் ராட்சசி என்ற படத்தில் அடுத்து பாடினார். டைம்சு ஆப் இந்தியா இவர் பாடிய 'நீ என் நண்பனே' என்ற பாடல் கேட்பதற்கு இதமாக இருந்தது என்று பாராட்டி இருந்தது. அடுத்து சாக்பாட் என்ற படத்திலும் பின்பு பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் பின்பு ஓ2 என்ற படத்திலும் பாடியிருந்தார்
2022ஆம் ஆண்டு வெளியான பிரம்மாச்சுத்திரா என்ற படத்தின் தமிழ் பதிப்பில் அலியா பட்டுக்கு குரல் கொடுத்திருந்தார்.