தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஃபிரெட் ட்ரூமன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 369) | சூன் 5 1952 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 17 1965 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, ஆகத்து 17 2007 |
ஃபிரெட் ட்ரூமன் (Fred Trueman, பிறப்பு: பெப்ரவரி 6 1931, இறப்பு: சூலை 1 2006 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 603 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1952 - 1965 ல், இங்கிலாந்து நாட்டு அணியின் உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுல் ஒருவராகக் கருதப்படும் ஃபிரெட் ட்ரூமன் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 307 இலக்குகளை வீழ்த்தி அவருடைய காலத்தின் அருஞ்செயல் புரிந்தவரானார். சிறப்பான பங்களிப்பாக ஒரு ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் கொடுத்து 8 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.[1]
இவர் பிரையன் ஸ்டேதமுடன் இணைந்து பல ஆண்டுகள் துவக்க ஓவர்களை வீசி வந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச் சிறந்த துவக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மிகச் சிறந்த களத் த்டுப்பு வீரராகவும் அறியப்பட்டார். குறிப்பாக லெக் சிலிப்பில் சிறப்பாகச் செயலபட்டார். மேலும் பின்கள வீரராகக் களம் இறங்கி அணியின் ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்தார். இவர் மூன்று முதல் தரத் துடுப்பாட்ட நூறுகளை அடித்துள்ளார். துடுப்பாட்ட எழுத்தாளர்கள் சங்கம் இவருக்கு 1951 மற்றும் 1952 ஆம் ஆண்டின் சிறந்த இளாம் துடுப்பாட்ட வீரராகத் தேர்வு செய்தது. 1952 ஆம் ஆண்டில் இவரின் சிறப்பான ஆட்டத்தினால் 1953 ஆம் ஆண்டின் விசுடன் துடுப்பாட்ட அறிக்கையில் இடம் பிடித்தார்.
இவருடைய திறமை மற்றும் பிரபலத்தின் காரணமாக யார்க்ஷயரின் மிகச் சிறந்த வாழும் நபர் இவர் தான் என அப்போதைய பிரித்தானிய பிரதமர் ஹெரால்டு விசன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இருந்தபோதிலும் பல இங்கிலாந்து அணிகளில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். அணிகளின் நிர்வாகத்திடம் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக இவர் விலக்கப்பட்டார். துடுப்பாட்ட வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஊடகத் துறையில் பணியாற்றினார். பிபிசி வானொலியில் தேர்வுத் துடுப்பாட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.1989 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணியின் பிறந்தநாள் விழாவில் துடுப்பாட்டத்தில் இவரின் பங்களிப்பினை பாராட்டும் விதமாக இவருக்கு பிரித்தானிய பேரரசின் விருது வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஹால் ஆஃப் பேமாக அறிவிக்கப்பட்டார்.
ஆகஸ்டு 2008 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி அதன் 1000 ஆவது போட்டியில் விளையாடியது. அப்போது இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட பதினொரு தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் கொண்ட அணியில் இவருக்கும் இடம்கிடைத்தது.
ஃபிரட் ட்ரூமன் யார்க்சயரில் உள்ள ஸ்டைன்டனில் இவரின் பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்.[2] இவர் தான் பிரக்கும் போது 6.4 கிலோ இருந்ததாகவும் தனது பாட்டி திருமதி. ஸ்டிம்சன் தனது தாய்க்கு பிரசவம் பார்த்ததாகவும் கூறினார்.[3] இவருக்கு முதலில் சீவர்ட்ஸ் என பெயரிடப்பட்டது பின் ட்ரூமனின் பெற்றோர்கள் பாட்டியினைப் பெருமைப்படுத்துவதற்காக ஃபிரடரிக் சீவர்ட்ஸ் ட்ரூமன் எனப் பெயரிட்டனர்.[2]
மே 11, 1949 இல் தனது முதல் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். கேம்பிரிட்ஜ் அணிக்கு எதிரான மூன்று நாள்கள் கொண்ட போட்டியில் இவர் யார்க்ஷயர் அணி சார்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் யார்க்ஷயர் அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது. இவர் சுழற் பந்துவீச்சாளர் என தவறுதலாக விசுடன் நாட்குறிப்பில் குறிக்கப்பட்டது.[4] அந்தப் போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் பிறையன் குளோசுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். பிரையன் குளோஸ் மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார். ட்ரூமன் அதில் முதல் ஆட்டப் பகுதியில் 72 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த போதிலும் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப் பகுதியில் 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். கேம்பிரிட்ஜ் அணி 283 மற்றும் 196 ஓட்ட்ங்களில் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் ஆட்டமிழந்தது. யார்க்சயர் அணி 6 இலக்குகளை இழந்து 317 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் என அறிவித்தது.அதனால் ட்ரூமன் துடுப்பாட வாய்ப்பு கிடைக்கவில்லை.