பிரேமா நரேந்திர புராவு Prema Narendra Purao | |
---|---|
பிறப்பு | 15 ஆகத்து 1935 கோவா, இந்தியா |
பணி | சமூக சேவகர், சுதந்திரப் போராட்ட வீரர் |
அறியப்படுவது | சமூக சேவை |
வாழ்க்கைத் துணை | நரேந்திர புராவு |
விருதுகள் | பத்மசிறீ அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கத்தின் சிறி ரத்னா விருது துர்காபாய் தேசுமுக் விருது-1999 |
பிரேமா நரேந்திர புராவு (Prema Narendra Purao) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் நன்கு அறியப்படுகிறார். ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக பணியாற்றும் ஓர் அரசு சாரா அமைப்பான அன்னபூர்ணா மகிளா மண்டல் என்ற அமைப்பை இவர் 1975 ஆம் ஆண்டில் நிறுவினார்.[1] கோவா விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார்.[1] அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கத்தின் சிறி ரத்னா விருது பெற்றுள்ளார்.[2] இந்திய அரசு 2002 ஆம் ஆண்டில் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை பிரேமா நரேந்திர புராவு வழங்கி சிறப்பித்தது.[3]