பிரேம் குமார் ரியாங்கு Prem Kumar Reang | |
---|---|
மீன்வளம், கூட்டுறவு மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகம் | |
அமைச்சர்[1] | |
பதவியில் 2022–2023 | |
சட்டமன்ற உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் 09 மார்ச்சு 2018 – 2023 | |
முன்னையவர் | இராசேந்திர ரியாங்கு |
பின்னவர் | பிலிப் குமார் ரியாங் |
தொகுதி | கஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 10, 1974 கச்சி ராம் பாரா, ஆனந்த பசார், வடக்கு திரிபுரா, திரிபுரா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி |
துணைவர் | மந்தா தரி ரியாங்கு |
பெற்றோர் |
|
பிரேம் குமார் ரியாங்கு (Prem Kumar Reang) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று புபஞ்சாய் ரியாங்கு மற்றும் கும்படி தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். திரிபுராவைச் சேர்ந்த இவர் தற்போது திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியில் இணைந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காஞ்சன்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [2] தற்போது காஞ்சன்பூரின் (இந்தியா) சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் [3]
2022 ஆம் ஆண்டில் மாணிக் சாகா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கூட்டுறவு மற்றும் பழங்குடியினர் நலன் அமைச்சரானார். [4] [5] [6] தற்போது திரிபுராவில் மூன்று அமைச்சகங்களின் அமைச்சராக உள்ளார். புரு பழங்குடியினர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவராக இருந்தார் [7]