பிரையன் ஆண்ட்ரூசு | |
---|---|
பிறப்பு | பிரையன் டி. ஆண்ட்ரூசு 1975 (அகவை 49–50) |
பணி | கதைக் கலைஞர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–இன்று வரை |
பிரையன் டி. ஆண்ட்ரூசு (ஆங்கில மொழி: Bryan D. Andrews) என்பவர் அமெரிக்க நாட்டு கதைக் கலைஞரும், எழுத்தாளராகவும் ஆவார். 1975 இல் பிறந்த ஆண்ட்ரூசு, வார்னர் புரோஸ். இயங்குபடம் உருவாக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான 'குவெஸ்டு போர் கேம்லாட்' திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதை தொடர்ந்து ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ், சாமுராய் ஜாக் போன்ற இயங்குபடங்களிலும் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் பல்வேறு தவணைகளான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் போன்ற திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார். இவர் கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சிக்காக 'சிம்-பயோனிக் டைட்டன்' என்ற இயங்குபட தொடரை உருவாக்க ஜென்டி டார்டகோவ்ஸ்கியுடன் இணைந்து பணியாற்றினார், இது 20 அத்தியாயங்ககளை கொண்டுள்ளது.[1]
இவர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு பிரதானநேர எம்மி விருதுகள் இரண்டிலும் ஸ்டார் வார்ஸ்: குளோன் வார்ஸில் "சிறந்த அனிமேஷன் புரோகிராம் (ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேல் புரோகிராமிங் செய்ததற்காக) என்ற பிரிவில் இவரது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.[2][3]