பிரோசு சா அரண்மனை வளாகம் | |
---|---|
![]() பிரோசு சா அரண்மனை வளாகத்தின் உட்புறப் பகுதி | |
அமைவிடம் | ஹிசார், அரியானா, இந்தியா |
ஆள்கூற்றுகள் | 29°09′59″N 75°43′14″E / 29.166306°N 75.720587°E |
Settled | 1357 |
நிறுவப்பட்டது | 1354 |
கட்டப்பட்டது | 14ஆம் நூற்றாண்டு |
க்காக கட்டப்பட்டது | பிரூசு சா துக்ளக் |
தகர்ப்பு | 1398 |
மீட்டெடுத்தவர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கட்டிட முறை | இஸ்லாமியக் கட்டிடக்கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
பிரோசு சா அரண்மனை வளாகம் ( Firoz Shah palace complex ) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள நவீன கால ஹிசாரில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் வளாகமாகும். இது கி.பி 1354 இல் தில்லி சுல்தான் பிரோசு சா துக்ளக்கால் கட்டப்பட்டது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது.[1]
ஹிசார் என்ற அசல் நகரம் கோட்டையின் உள்ளே ஒரு சுவர் குடியேற்றமாக இருந்தது. ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம், பிரோசு சா அரண்மனை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. இது அயர்லாந்தைச் சேர்ந்த சாகசக்காரர் ஜார்ஜ் தாமசு ( அண். 1756 - 22 ஆகஸ்ட் 1802) என்பவரால் இல்லமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. [1] இந்த வளாகத்தில் லாட் கி மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் அசோகரின் தூண்கள் ஆகியவையும் உள்ளது.[2] குர்சாரி மகால், என்ற அருகிலுள்ள மற்றொரு அரண்மனை, பிரோசு சா தனது மனைவி குர்சாரிக்காக 1356இல் கட்டினார்.[3]
ஹிசார்-இ-ஃபிருசா என்றும் அழைக்கப்படும் இந்த அரண்மனை, ஈரானின் வடகிழக்கில் உள்ள வரலாற்றுப் பகுதியான குராசானை நோக்கிச் செல்லும் பழைய தில்லி முல்தான் சாலைக் கிளைகள் கொண்ட ஒரு முக்கியப் புள்ளியில் அமைந்துள்ளது.
சுல்தன் பிருசா சாவின் மேற்பார்வையில் கி.பி. 1354 இல் இதன் கட்டுமானம் தொடங்கியது. பாதுகாப்பு அகழியால் சூழப்பட்ட அரண்களைக் கட்ட மகேந்திரகர் மலைகளில் இருந்து கல் கொண்டு வரப்பட்டது. அகழியில் நீர் நிரப்ப வளாகத்தின் உள்ளே ஒரு குளம் பயன்படுத்தப்பட்டது. இந்த வளாகம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 1356 இல் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் சுல்தான் தனது அரண்மனைகளை கோட்டையின் சுவர்களுக்குள் கட்டும்படி கட்டளையிட்டார்.[4]
அரண்மனை வளாகம் ஒரு மசூதி, ஒரு திவான்-இ-ஆம், சுல்தானின் மனைவிக்கான அரண்மனை, நிலத்தடி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தானியக் களஞ்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [3] கோட்டையில் உள்ள கலைப்படைப்பு இஸ்லாமிய மற்றும் இந்திய கட்டிடக்கலையை ஒருங்கிணைக்கிறது. இருப்பினும் மசூதி செல்யூக் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த அரண்மனை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கோட்டைக்குள் உள்ள அரண்மனை வளாகத்தில் ஒரு அரச நுழைவாயில் இருந்தது. கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அரண்கள் முதலில் நான்கு முக்கிய வாயில்களைக் கொண்டிருந்தன.[4]
பிரித்தானியர் ஆட்சிக் கால வரலாற்று கட்டிடம் ஒன்று வடகிழக்கில் உள்ள வளாகத்தில் உள்ளது. இங்கு ஹிசார், அரசாங்க கால்நடை பண்ணையின் கண்காணிப்பாளருக்கான வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. [1]