பிர்லா மந்திர், ஜெய்ப்பூர் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பிர்லா மந்திர், ஜவக்ர்லால்நேரு மார்க், திலக் நகர், ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302022, இந்தியா |
சமயம் | இந்து |
மாநிலம் | ராஜஸ்தான் |
பிர்லா மந்திர் (Birla Mandir) (இலட்சுமி நாராயணன் கோயில்) என்பது இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும். [1] இது பல பிர்லா மந்திர்களில் ஒன்றாகும். [2] இது 1988 ஆம் ஆண்டில் பி.எம். பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்டது. மேலும், இது வெண் பளிங்குக் கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இது இந்து லட்சுமி மற்றும் விஷ்ணு (நாராயணன் ) ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [3] இங்கே உள்ளே தோன்றும் உருவங்களும், மற்ற இந்து கடவுளர்களும், தெய்வங்களும் கீதை மற்றும் உபநிடதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. [4] கோவிலில் தீபாவளி, கிருட்டிண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோயில் தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, அதே போல் மாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை திறந்திருக்கும். இது ஜெய்ப்பூரின் திலக் நகர் பகுதியில் மோதி துங்கரி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. [5]
ஒரு மகாராஜா பிர்லா குடும்பத்திற்கு கோயிலின் நிலத்தை ஒரு ரூபாய்க்கு விற்றதாக ஒரு பாரம்பரியம் கூறுகிறது. [4] [6] [7] இராமனுச தாசு மற்றும் கன்சியாம் பிர்லா ஆகியோரின் மேற்பார்வையில் 1977 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. [8] இது 1988 பிப்ரவரி 22 இல் திறக்கப்பட்டது. [9]
இந்த கோயில் வெள்ளை பளிங்குகளால் ஆனது. கோயிலில் கருவறை, கோபுரம், பிரதான மண்டபம் மற்றும் நுழைவாயில் என நான்கு தனித்தனி பகுதிகள் உள்ளன. [10] இது மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மூன்று முக்கிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. [4] அத்துடன் பாரம்பரிய இந்து கதைகளை சித்தரிக்கும் கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டுள்ளது். [3] பளிங்கு சிற்பங்கள் [1] இந்து புராணங்களைக் குறிப்பிடுகின்றன. [11] இது உள்ளே இந்து தெய்வங்களைக் கொண்டுள்ளது - குறிப்பாக லட்சுமி, நாராயணன் மற்றும் பிள்ளையார் - வெளிப்புறப் சுவர்களில் இயேசு, மரியாள், புனித பேதுரு, புத்தர், கன்பூசியஸ் மற்றும் சாக்ரடீஸ் போன்றவர்களின் உருவங்களும் உள்ளன. [2] [12] இதன் நிறுவனர்களான ருக்மணி தேவி பிர்லா மற்றும் பிரஜ் மோகன் பிர்லா ஆகியோரின் சிலைகள் வெளியில், கோயிலை எதிர்கொண்டு வணக்கம் செய்வது போல அமைத்துள்ளனர். அதன் கட்டடக்கலை பாணி நவீனமாக கருதப்படுகிறது. இது ஒரு உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இரவில், அது வெளிச்சத்தால் சூழப்பட்டிருக்கும். கோயிலைத் தவிர, மைதானத்தில் தோட்டங்கள், ஒரு சிறிய பரிசுக் கடை ஆகியவையும் உள்ளது. கோயிலுக்கு கீழே பி.எம். பிர்லா குடும்ப அருங்காட்சியகமும், ஜி.பி. பிர்லா குடும்ப புகைப்படக் காட்சியகத்தையும் கொண்டுள்ளது. இரண்டுமே கோவிலின் கட்டுமானத்தின் புகைப்படங்களையும், பிர்லா குடும்பத்தின் தொண்டுப் பணிகளையும், பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த பொக்கிசங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.