ஜி. டி. பிர்லா விருது அறிவியல் ஆராய்ச்சிக்காக 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கே. கே. பிர்லா அறக்கட்டளை மூலம், இந்திய வள்ளல் கன்சியாம் தாஸ் பிர்லா நினைவாக வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.
50 வயதுக்கு குறைவான இந்தியாவில் வாழும், பணியாற்றும் விஞ்ஞானி ஒருவரால் கடந்த 5 ஆண்டுகளின் போது மேற்கொள்ளப்பட்ட சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதின் மதிப்பு ரூ.1.5 இலட்சங்கள் ஆகும். ஆண்டுதோறும் இந்த விருது அறிவியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது. [1]