பிறையன் ஜி. டபிள்யூ. மேன்னிங்கு Brian G. W. Manning | |
---|---|
பிறப்பு | ஆன்ட்சுவர்த், பர்மிங்காம், இங்கிலாந்து | 14 மே 1926
இறப்பு | 10 நவம்பர் 2011 உவொர்சுட்டர்சயர் | (அகவை 85)
தேசியம் | பிரித்தானியர் |
பணி | வானியலாளர் |
பிறையான் ஜார்ஜ் வில்லியம் மேன்னிங்கு (Brian George William Manning, 14 மே 1926 – 10 நவம்பர் 2011)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர். இவர் 19 சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.[2] இவர் பர்மிங்காமில் 1926 இல் பிறந்தார். இவர் தனது தந்தை பணிபுரிந்த தொழிற்சாலையின் கூரையிலிருந்து எடுத்த இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு வெடித்த கண்ணாடித் துண்டிலிருந்து தனது முதல் கண்ணாடியை உருவாக்கினார். இவர் பொறியியல் வரைவாளராகப் பணியைத் தொடங்கிப் பின்னர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வானிலையியலாளர் ஆனார். இவர் 1950 களின் கடைசியில் வீட்டுப் பணிப்பட்டறையில் ஒளிக் குறுக்கீட்டுக் கட்டுபாட்டு கோடிடும் எந்திரத்தை கட்டியமைத்தார். இது உயர்தர 2க்கு 3 அங்குல வரிவெளியை உருவாக்கியது.[3] 1990 இவருக்கு எச். டி. டால் பரிசு வழங்கப்பட்டது.[3][4]
சிறுகோள் மையம் இவர் இங்கிலாந்து கிடெர்மினிசுட்டர் அருகேயுள்ள் சுட்டேகன்பிரிட்ஜ் வான்காணகத்தில் இருந்து1989 முதல் 1997 வரை 19 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக (பவாக 494) கூறுகிறது.[2] பிறையான் மேன்னிங்கின் கண்டுபிடித்த பெரும்பட்டைச் சிறுகோள்கள் பின்வருமாறு:
|
|