பிற்ரன்

புனித மேரி தேவாலயம், பிற்ரன்

பிற்ரன் (Bitton) இங்கிலாந்தின் தென்மேற்கு மாவட்டங்களில் ஒன்றான தெற்கு குளொஸ்டர்சயரில் பிரிஸ்டல் நகருக்கு கிழக்குப் பக்கத்தில் பாய்ட் ஆற்றை ஒட்டி உள்ள ஒரு சிறிய கிராம மற்றும் சிவில் திருச்சபை ஆகும். 2011ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இங்குள்ள மக்கள்தொகை 9,307 ஆகும். 

இக்கிராமத்தில் கோடை வசந்தகாலத்தில் ஒரு நாள் 'Open Gardens' நிகழ்வு நடக்கும். அவ்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள் பொதுமக்களின் பார்வைக்கு தங்களது வீட்டுத்தோட்டத்தினை திறந்துவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை பிற்ரன் புனித மேரி தேவாலயத்தின் திறந்த வெளியில்  கிராம களியாட்டவிழா நடக்கும். இக்கிராமத்தை மையமாகக் கொண்டு 1892இல் தொடங்கப்பட்ட பிற்ரன் உதைப்பந்தாட்ட கழகம் இன்றும் இயங்கி வருகின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. History Bitton A.F.C.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிற்ரன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.