பிலிசு ஆன் பாக்சு | |
---|---|
பிறப்பு | 1923 கொலராடோ |
குடியுரிமை | அமெரிக்க ஐக்கிய நாட்டினர் |
பணியிடங்கள் | செனரல் எலக்ட்ரிக் கௌரன்ட் கணித அறிவியல் நிறுவனம் எம்.ஐ.டி நெவார்க் பொறியியல் கல்லுாரி பெல் ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | வெல்லெசுலி கல்லுாரி கொலராடோ பல்கலைக்கழகம் எம்ஐடி |
ஆய்வேடு | On the use of coordinate perturbations in the solution of physical problems (1954) |
ஆய்வு நெறியாளர் | சியா-சியோ லின் |
அறியப்படுவது | மின்னியக்கவியல் (நிரலாக்க மொழி) லிஸ்ப் PORT கணிதவியல் நுாலகம் |
பிலிசு ஆன் ஃபாக்சு (Phyllis Ann Fox) ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் கணினி விஞ்ஞானி ஆவார்.[1][2] இவர் கொலராடோவில் வளர்ந்தார்[2] வெல்லசுலி கல்லூரியில்,1944 ஆம் ஆண்டில் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1944 முதல் 1946 வரை செனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் வகை நுண் கணித அடிப்படையிலான வேற்றுமை பகுப்பாய்வாளர் திட்டப்பணியில் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
1948 ஆம் ஆண்டில் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இளங்கலைப் பட்டத்தை மின் பொறியியல் துறையில் பெற்றார்.[1][2] பின்னர், அவர் 1949 ஆம் ஆண்டில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சென்று முதுகலை அறிவியல் (மின் பொறியியல்) பட்டத்தையும்,1 954 ஆம் ஆண்டில் சியா-சியோ லின் மேற்பார்வையில் கணிதத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1][2][3] இதே சமயத்தில், ஜே. பாரெஸ்டரின் கீழ் எம்.ஐ.டியின் வேர்ல்விண்ட் திட்டத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார்.[1]
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கோரண்ட் கணித அறிவியல் கழகத்தில் ஐக்கிய அமெரிக்க அணுசக்தி ஆணைய குழுவின் கணினி மையத்தில், எண்கணிதத்தில் யுனிவாக்கின் பகுதி வகைக்கெழு சமன்பாடடிற்கு தீர்வு காண 1954 முதல் 1958 வரை பணியற்றினார். 1958 ஆம் ஆண்டில், தனது கணவரைத் தொடர்ந்து, எம்.ஐ.டியின் முற்போக்கு அமைப்பு இயக்கவியல் ஆராய்ச்சி குழுவிற்குத் திரும்பினார்,
அங்கு இயக்கவியல் பகுதியில் நிரலாக்க மொழி எழுதிய குழுவில் ஒருவராக இருந்தார்.[1][2][4]. பின்னர் அவர் லிஸ்ப் மொழியின் முதல் மொழிபெயர்ப்பாளர் குழுவில் உடனுழைப்பவராகவும், முதல் லிஸ்ப் மொழி கையேட்டின் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார்.[5]
1963 ஆம் ஆண்டில் அவர் எம்.ஐ.டி.யில் இருந்து நியூ செர்சி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (நெவார்க் பொறியியல் கல்லூரி) மாற்றப்பட்டார், அங்கு அவர் 1972 ஆம் ஆண்டில் முழு நேரப் பேராசிரியராக ஆனார். இந்த நேரத்தில், அவர் பெல் ஆய்வகத்திற்கான ஆலோசனைப் பணியையும் மேற்கொண்டார். அவர் 1973ஆம் ஆண்டில் மிகவும் வசதியான, எண்ணியல் தொடர்பான கையடக்க நூலகம் (PORT) ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். 1984ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.[1][2]
{{cite web}}
: |first=
has generic name (help)
l first = Nancy
l last = Rosenberg