பிலிப்பா பிரவுனிங் Philippa Browning | |
---|---|
பிறப்பு | பிலிப்பா கே. பிரவுனிங் |
துறை | வானியற்பியல் சூரிய இயற்பியல் |
பணியிடங்கள் | மான்செசுட்டர் பலகலைக்கழகம் மான்செசுட்டர் பலகலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் |
கல்வி | மிலிபீல்டு[1] |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (கலி இளவல்) ஆந்திரூவ்சு பலகலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | சூரிய வளிமண்டல ஒருபடித்தற்ற காந்தப் புலங்கள் |
ஆய்வு நெறியாளர் | எரிக் பிரீசுட்டு[2] |
விருதுகள் | சாப்மன் விருது (2016) |
இணையதளம் www |
பிலிப்பா கே. பிரவுனிங் (Philippa K. Browning) மான்செசுட்டர் பலகலைக்கழக யோதிரல் பாங்கு வானியற்பியல் மையத்தில் வானியற்பியல் பேராசிரியராக உள்ளார்.[3] இவர் மின்ம இயற்பியல் புலத்தில் பிணைவுறும் மின்ம ஊடகங்களின் கணிதவியல் படிமங்களில் ஆராய்ச்சியில் சிறப்புப் புலமை வாய்ந்தவர் ஆவார்[4] .
பிரவுனிங் மிலிபீல்டில் கல்விகற்றார்.[1] இவர் 1979 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மும்மை இளவல் பட்டம் பெற்றார்.[5] இவர் 1980 இல் அப்பட்ட்த்தின் மூன்றாம் பகுதியை முடித்தார்.[6] இவர் வானியற்பியலில் பணிபுரிய யூரி க்காரினால் ஆர்வம் பெற்றுள்ளார்.[7][8] இவர் தன் மேற்படிப்புக்கு புனித ஆந்திரூவ்சு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எரிக் பிரீசுட்டு வழிகாட்டுதலில் ஆய்வு மேற்கொண்டார்.[9][10] இவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்கு சூரிய மண்டல ஒருபடித்தற்ற காந்தப் புலங்கள் தலைப்பில் 1984 இல் ஆய்வுரை வழங்கினார்.[2]