பில் வில்சன் வீடு

வில்சன் வீடு
Wilson House
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
அமைவிடம்: 378 விலேஜ் வீதி, கிழக்கு ரோர்செட், வெர்மான்ட்
ஆள்கூறு: 43°14′22″N 73°0′33″W / 43.23944°N 73.00917°W / 43.23944; -73.00917
பரப்பளவு: ஒரு ஏக்கருக்கும் குறைவு
கட்டியது: 1852 (1852)
கட்டிடக்கலைப் 
பாணி(கள்):
கிரேக்கக் கட்டிடக்கலை
நிர்வாக அமைப்பு: தனியார்
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
திசம்பர் 13, 1995
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
95001427[1]

பில் வில்சன் வீடு (Bill Wilson House) 19 ஆம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்புமிக்க இல்லம் ஆகும். வெர்மான்ட்டின் கிழக்கு டோர்செட்டில் 378 கிராம வீதியில் 1852 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் இணை நிறுவனர் பில் வில்சனின் பிறப்பிடம் மற்றும் வாழ்க்கையின் நினைவுச்சின்னமாகும். 14 விருந்தினர் தங்கும் அறைகள் மற்றும் ஒரு கூட்டம் நடத்தும் அறையுள்ளது.இங்கு இலாப நோக்கற்று படுக்கை மற்றும் காலை உணவு வழங்கபடுகிறது. மீட்பு கருத்தரங்குகள் மற்றும் வழக்கமான ஏஏ மற்றும் ஆல்அனான் கூட்டங்கள் நடைபெறும் மையமாகும் . 1995 ஆம் ஆண்டின் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் இந்த சொத்து பட்டியலிடப்பட்டுள்ளது.

விளக்கம்

[தொகு]

பில் வில்சன் வீடு கிராம வீதியின் தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு டோர்செட்டின் மையத்தில் உள்ள மேட் டாம் சாலையில் உள்ளது, இது அந்த கிராமத்தின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும். இது இரண்டு தளம் கொண்ட மரத்தினால் உருவாக்கப்பட்ட கட்டிடமாகும், வீட்டின் முகப்பு மேற்கு நோக்கி கிராமத் தெருவில் இணைகிறது, மேலும் மூன்று பிரிவுகள் மேட் டாம் சாலையில் கிழக்கு நோக்கி அமைக்கபட்டுள்ளது. முன்பக்கம் கிரேக்க கட்டிடகலையில் ஒற்றை மாடி மண்டபம் உள்ளது, இது வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் ஓரளவு நீண்டுள்ளது. இது ஒரு பெரிய வண்டிகளை நிறுத்தும் இடத்துடன் இனைகிறது. இது இப்போது கூட்டம் நடத்தும் இடமாகவும் உணவு உண்னும் இடமாகவும் செயல்படுகிறது. [2]

வரலாறு

[தொகு]

இந்த வீடு 1852 ஆம் ஆண்டில் சிறிய வெர்மான்ட் பளிங்கு குவாரிகள் நிறைந்த கிராமத்தில் இந்த கட்டிடம் ஒரு விடுதியாக (ஹோட்டலாக) கட்டி திறக்கப்பட்டது. உரிமையாளர்கள் கிரிஃபித் குடும்பம்வில்லியம் (பில்) கிரிஃபித் வில்சன் நவம்பர் 26, 1895 இல் பனிப் புயலின் போது ஹோட்டலின் தரை தளத்தில் பிறந்தார். பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ற்கு குடிபெயர்ந்தார் அவர் பெற்றோரின் விவாகரத்து வரை ரட்லாண்டில் வசித்தார் . பின்னர் தனது 11 வயதில் பில் மற்றும் அவரது சகோதரி டோர்தி, கிழக்கு டோர்செட்டிற்குத் திரும்பி தங்கள் தாய்வழி தாத்தா பாட்டிகளான கிரிஃபித்துடன் வாழ்ந்தனர். 1987 ஆம் ஆண்டில் இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக யாரும் வசிக்கவில்லை.ஓஸ்ஸி லெப்பர் அந்த வீட்டை வாங்கி அதனை பில் வாழ்ந்த நினைவிடமாக மாற்றினார்..பில்லின் கல்லறை அவரது மனைவி லுயிஸ் மற்றும் கிரிஃபித் .

ஹோட்டலின் அறை எண் 9 பில் மற்றும் அவரது மனைவி லுயிஸ் அவர்களின் வருகையின் போது தங்கியிருந்த அறை என்று நம்பப்படுகிறது.

கிரிஃபித் நூலகம்

[தொகு]

கிரிஃபித் நூலகத்திற்கு அருகில் பில் தனது சகோதரி மற்றும் தாத்தா பாட்டிகளுடன் வசித்துள்ளார். இப்போது இப்பகுதி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்படுகிறது.இது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் புத்தகத்தின் ஆசிரியரான பில் வில்சனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில்தான் அவருக்கு புதிதாக ஒரு வளரி (பூமராங்) செய்வது, வானொலியை உருவாக்குவது போன்ற பல முக்கியமான குழந்தை பருவ அனுபவங்கள் நிகழ்ந்த இடம். இவ் வீட்டின் அருகிலுள்ள எமரால்டு ஏரியில் அவர் தனது வருங்கால மனைவி லூசி வில்சனை சந்தித்தார். [3]

வில்சன் பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு முன்னர், பில் மற்றும் லோயிஸ் வில்சன் அடிக்கடி கிழக்கு டோர்செட்டுக்கு திரும்பி வந்து ஏரி விடுதியில் (Aerie inn) தங்கியிருந்தனர், இது வில்சன் இல்லம் இருகும் அதே ஊரில் உள்ளது. பில் வில்சன் கோடைகாலத்தை ஏரி விடுதியில் 1960 முதல் 1970 களின் முற்பகுதியில் அவர் இறந்த ஆண்டு வரை கழித்தார். பில் வில்சனுக்கு குழந்தை இல்லை, இது ஏரி விடுதியின் உரிமையாளர்களுக்கு நெருக்கமாக மாற வழிவகுத்தது. பில் மற்றும் அவர் மனைவி ஒவ்வொரு வருகையின் போதும் விரும்பும் அறை எண் 6 . இந்தஅறை இன்று வரை பராமரிப்பு வேலை செய்யாமல் உண்மை தோற்றதை மாற்றாமல் பாதுகாக்கப்படுகிறது. வில்சன்ஸ் நினைவகத்தின் ஒருமைப்பாட்டை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2003 ஆம் ஆண்டு வரை இந்த சொத்து வாங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
  2. [[[:வார்ப்புரு:NRHP url]] "NRHP nomination for Bill Wilson House"]. National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03. {{cite web}}: Check |url= value (help)
  3. Pass it on; p. 17-36

வெளி இணைப்புகள்

[தொகு]