பில்லா | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
கதை | ஏ. எல். நாராயணன் (வசனம்) |
இசை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி |
வெளியீடு | 26 சனவரி 1980 |
ஓட்டம் | 181 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பில்லா (Billa) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 1978ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தித் திரைப்படமான டொன் எனும் திரைப்படத்தைத் தழுவியே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆயினும் திரைக்கதையில் தமிழ்த் திரைப்பட இரசிகர்களுக்கு ஏற்றவகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
எம் எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2] மை நேம் இஸ் பில்லா, வெத்தலய போட்டேன் டி பாடல்கள், 2007-இல் வெளியான பில்லா 2007 திரைப்படத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டன.[3][4][5]
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | காலம் |
---|---|---|---|---|
1 | "மை நேம் இஸ் பில்லா" | கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:26 |
2 | "இரவும் பகலும்" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | 04:39 | |
3 | "வெத்தலயப் போட்டேன் டி" | மலேசியா வாசுதேவன் | 04:48 | |
4 | "நாட்டுக்குள்ள எனக்கொரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:38 | |
5 | "நினைத்தாலே இனிக்கும் சுகமே" | எல். ஆர். ஈசுவரி | 04:23 |
இப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மிக அருமையாக அமைந்தது என பிரைடேமூவிஸ் விமர்சித்தது.[6]