கி.பி. 1901 ஆம் ஆண்டில் தங்கள் ஆரம்பகால செஸ்ட்நட் ஸ்ட்ரீட் ஸ்டுடியோவில் பிளாஸ்டிக் கிளப் உறுப்பினர்கள் | |
நிறுவப்பட்டது | 1897 |
---|---|
நிறுவனர் | எமிலி சார்டெய்ன் |
நிறுவப்பட்ட இடம் | பிலடெல்பியா, பென்சில்வேனியா |
நோக்கம் | இளம் கலைஞர்களை ஒன்றிணைப்பதும், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் பெண்களுக்கான கலை அமைப்பு |
தலைமையகம் | 247 தெற்கு காமக் தெரு |
தலைமையகம் | |
மன்றத்தலைவர் (1897) | எட்சர் பிளானெ தில்லே |
முழக்கம் | "அனைத்தும் கடந்து செல்கின்றன; கலை மட்டுமே நம்மிடம் நிலைத்திருக்கிறது மார்பளவு சிம்மாசனத்தை மிஞ்சுகிறது நாணயம், திபீரியஸ்" |
வலைத்தளம் | www |
பிளாஸ்டிக் மன்றம் என்பது பிலடெல்பியா, பென்சில்வேனியாவில் அமைந்துள்ள இளம் கலைஞர்களை ஒன்றிணைப்பதும், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் பெண்களுக்கான கலை அமைப்பு ஆகும். 1897 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, இந்த பிளாஸ்டிக் மன்றம் அமெரிக்காவில் பழமையான கலைக் கழகங்களில் ஒன்றாகும். இது 1900 களின் தொடக்கத்தில் ஒரு கலாச்சார நிலையமாக இருந்த "கிளப்பின் லிட்டில் ஸ்ட்ரீட்" என்ற 247 காமக் தெருவில் அமைந்துள்ளது.[1] 1991 ஆம் ஆண்டு முதல், ஆண்களும் இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக சோ்த்துக் கொள்ளப்பட்டனா்.
பிளாஸ்டிக் மன்றம், பிலடெல்பியா பெண்களுக்கான வடிவமைப்பு பள்ளியின் (இப்போது மூர் கலைக் கல்லூரி) முதல்வரும், கலைக் கல்வியாளருமான எமில் சாா்டன் என்பவரால் நிறுவப்பட்டது. பெண் கலைஞர்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் உறுப்பினர்களின் வேலைகளை ஊக்குவிப்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த கலை அமைப்பு நிறுவப்பட்டது, மேலும் பிலடெல்பியா ஸ்கெட்ச் மன்றம், என்ற பிரத்யேக ஆண் கலைக் குழுவிற்கு எதிராகவும் தொடங்கப்பட்டது.[2] அதன் முதல் தலைவர் எட்சர் பிளானெ தில்லே என்பவராவார்.[3] கிளப்பின் தத்துவமானது தியோஃபிலே கௌடியர் எழுதிய ஒரு கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது:
"அனைத்தும் கடந்து செல்கின்றன; கலை மட்டுமே நம்மிடம் நிலைத்திருக்கிறது
மார்பளவு சிம்மாசனத்தை மிஞ்சுகிறது
நாணயம், திபீரியஸ்"[4]
பிளாஸ்டிக் என்ற சொல், முடிக்கப்படாத எந்தவொரு கலைப் படைப்பின் நிலையையும் குறிக்கிறது. இம்மன்றத்தின் மூலம் மாதாந்திர கண்காட்சிகள், விரிவுரைகள், வகுப்புகள், கலை வகுப்புகள், சமூக நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்தி வருகிறது. அதன் வருடாந்தர அலங்காரக் காட்சி "முயல்" என்று அழைக்கப்படுகிறது.[6][7]
இதன் ஆரம்ப கால உறுப்பினா்கள் எல்னோர் ப்ளாஸ்ட்டட் அபோட், பவுலா ஹிம்மெல்ஸ் பாக் பலானோ, சிசிலியா பீக்ஸ், ஃபர்ன் கோப்பெட்ஜ், எலிசபெத் கப்பல் கிரீன், சார்லோட் ஹார்டிங், ஃபிரான்சஸ் டிப்டன் ஹண்டர், வயலட் ஓக்லி, எமிலி மற்றும் ஹாரிட் சர்டெயின், ஜெஸ்ஸி வில்கோஸ் ஸ்மித் மற்றும் ஆலிஸ் பார்பெர் ஸ்டீபன்ஸ் போன்ற நன்கு அறியப்பட்ட கலைஞர்களாவர். இவா்களில் பெரும்பாலானோா் ஹோவர்ட் பைல்லின் மாணவர்கள் ஆவார். 1898 ஆம் ஆண்டில் வீழ்ச்சி கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பைல்லின் முன்னாள் மாணவர்கள் எலிசபெத் ஃபியர்னே போன்சால், எலிசபெத் கப்பல் கிரீன், ஜெஸ்ஸி வில்கோஸ் ஸ்மித், சார்லோட் ஹார்டிங், வயலட் ஓக்லே மற்றும் அங்கேலா டி கோரா ஆகியோரின் படைப்புகள் தனிமைப்படுத்தப்பட்டன.
1918 ஆம் ஆண்டில், பிலடெல்பியா ஸ்கூல் ஆஃப் ஆக்குபேஷனல் தெரபி நிறுவப்படுவதில் இம்மன்றம் ஈடுபட்டது,[8] இது அமெரிக்காவில் ஆக்கிரமிப்பு, உள்நாட்டுப் போர் மற்றும் முதல் உலகப் போருக்கும் கலை மற்றும் கைவினை இயக்கம் ஆகியவற்றிற்கும் இடையேயான தொடர்பை பிரதிபலிக்கிறது.[9]
1991 ஆம் ஆண்டில் அந்த அமைப்பு ஆண்களையும் உறுப்பினர்களாகச் சேர்ப்பதென முடிவெடுத்தது.1990 களில் இம்மன்றத்தின் உறுப்பினர்களை அதிகரிக்கவும், கலைக் கலைஞர்களை ஈர்ப்பதற்காகவும், ஆண்டுக்கு இரண்டு பட்டதாரிகளை இலவச உறுப்பினராக்கி வருகிறது.
247, தென் காமக் தெருவிலுள்ள பிளாஸ்டிக் மன்றத்தின் கட்டிடத்தை 1962 ஆம் ஆண்டில் பிலடெல்பியாவின் வரலாற்று இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.[10]
பிளாஸ்டிக் கிளப்பின் குறிப்பிடத்தக்க முன்னாள் உறுப்பினா்களாக பின் வருபவா்களை அடையளம் காட்டுகிறது:[11]
{{cite book}}
: More than one of |first1=
and |first=
specified (help); More than one of |last1=
and |last=
specified (help)
{{cite book}}
: More than one of |ISBN=
and |isbn=
specified (help); More than one of |author1=
and |last=
specified (help); More than one of |author2=
and |last2=
specified (help); More than one of |author3=
and |last3=
specified (help)
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)
{{cite book}}
: More than one of |first1=
and |first=
specified (help); More than one of |last1=
and |last=
specified (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)