பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம் | |
---|---|
പീച്ചി- വാഴാനി വന്യജീവി സങ്കേതം | |
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பீச்சி அணையிலிருந்து பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடத்தின் ஒரு தோற்றம். | |
இந்திய வரைபடம் | |
அமைவிடம் | இந்தியா, கேரளம், திருச்சூர், திருச்சூர் வட்டம் |
அருகாமை நகரம் | திருச்சூர் |
ஆள்கூறுகள் | 10°28′52″N 76°26′46″E / 10.481°N 76.446°E[1] |
பரப்பளவு | 125 km2 (48 sq mi) |
நிறுவப்பட்டது | 1958 |
நிருவாக அமைப்பு | அரசு |
www |
பீச்சி-வாழனி காட்டுயிர் உய்விடம் (Peechi-Vazhani Wildlife Sanctuary) என்பது தென்னிநிதிய மாநிலமான, கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், பீச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் 1958 ஆம் ஆண்டில் சிம்மனி சிம்மோனி காட்டுயிர் உய்விடம் உட்பட பாலப்பிலி- நெல்லியம்பதி காடுகளை உள்ளடக்கியது மேலும் இது கேரளத்தின் இரண்டாவது பழமையான சரணாலயம் ஆகும். [2] [3]
இங்கு சராசரி கோடை வெப்பநிலை 38 °C (100 °F) என்றும், குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 15 °C (59 °F) என்றும் நிலவுகிறது.