பீட்டர் மோயின் (Petter Moen, 14 பெப்ரவரி 1901 - 8 செப்டம்பர் 1944) ஒரு நோர்வே எதிர்ப்பாளராக இருந்தார். இவர் எழுதிய நாட்குறிப்புகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார்.
நாட்சி செருமனி நோர்வே நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது இவர் லண்டன் டைட் என்னும் பெயரில் ஒரு இரகசியப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.[1] இவர் 1944 பெப்ரவரியில் செருமனிய அதிகாரிகள் பல இரகசியப் பத்திரிகைகளைக் கண்டெடுத்தபோது, இவர் கைது செய்யப்பட்டார்.[2] மோல்லர்காட்டாவில் சிறைவாசம் அனுபவித்த இவர், வெசுட்பாலென் என்ற கப்பலில் செருமனிக்கு அனுப்பப்பட்ட போது 1944 செப்டம்பரில் உயிரிழந்தார்.[3] சிறைச்சாலைக் கழிப்பறையில் இவர் ஒரு முள் கொண்டு எழுதிய நாட்குறிப்புக்காக இவர் பெரிதும் அறியப்பட்டார்.[4] இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இவரது நாட்குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[5] இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[3]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)