பீட்டர் மைக்கேல் ரோபக் (Peter Michael Roebuck (6 மார்ச்,1956 – 12 நவம்பர், 2011) என்பவர் ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் , பத்திரிக்கையாளர் மற்றும் வானொலி வர்னணையாளர் ஆவார். இவர் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 25,000 ஓட்டங்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். 1980 களில் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராகத் திகழந்தார்.[1] 1986 முதல் 1989 ஆம் ஆண்டு வரை சாமர்செட் அணிக்காக இரு முறை தலைவராக இருந்துள்ளார். மேலும் இங்கிலாந்து துடுப்பாட்ட லெவன் அணியில் இரு போட்டிகளில் தலைவராக இருந்துள்ளார்.[2] துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் இவர் பணியாற்றிய பிறகு பரவாலாக புகழ் பெற்றார்.[1] 2011 ஆம் ஆண்டில் இவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒரு வழக்கிற்காக விசாரிக்கப்பட்டார்.[3] நவம்பர் 12, 2011 இல் இவர் கேப்டவுன் நகரில் தற்கொலை செய்து கொண்டார். டிம் லேன் மற்றும் எலியட் கார்ட்லெட்ஜ் ஆகியோர் சேசிங் ஷேடோவ்ஸ் - தெ லைஃப் அண்ட் டெத் ஆஃப் பீட்டர் ரேபக் எனும் நூலினை எழுதினர். அந்ஹ நூல் அக்டோபர் 2015 இல் வெளியானது.[4]
வலதுகை மட்டையாளரான இவர் துவக்க வீரராக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவ்வப்போது வலதுகை சுழற் பந்துவீச்சாளராகவும் செயல்பட்டுள்ளார். தனது 13 ஆம் வயதில் சாமர்செட் அணிக்காக விளையாடியுள்ளார். 1974 ஆம் ஆண்டு முதல் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்மையான வீரராக விளையாடியிள்ளார். இவர் டேவன் அணிக்காக மைனர் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இருதியாக விளையாடினார். 1971 ஆம் ஆண்டில் இவர் முதல்தரத் துடுப்பாட்டப் போடிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.வலதுகை மட்டையாளரான இவர் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி துடுப்பாட்ட அணி, டேவன் மற்றும் சாமர்செட் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவருக்கு பிஜிபி ரேபக் எனும் சகோதரர் உள்ளார். இவர் இதுவரை 335 முதல்தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி 17558 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் 33 நூறுகளும் 53 ஐம்பது ஓட்டங்களும் அடங்கும். அதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 221* ஓட்டங்கள் இவரின் சிறந்த மட்டையாட்டம் ஆகும். பந்துவீச்சில் 72 இலக்குகளை 49.16 எனும் சராசரியில் எடுத்துள்ளார். 50 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் 162 கேட்சுகளை முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிடித்துள்ளார்.[5]
இதுவரை 298 முதல்தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி 7244 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் 5 நூறுகளும் 38 ஐம்பது ஓட்டங்களும் அடங்கும். அதில் 120 ஓட்டங்கள் எடுத்தது இவரின் சிறந்த மட்டையாட்டம் ஆகும். பந்துவீச்சில் 51 இலக்குகளை 25.09 எனும் சராசரியில் எடுத்துள்ளார். 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் 162 கேட்சுகளை முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிடித்துள்ளார். மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் போது இவர் ரூபர்ட் என அறியப்பட்டார். எசெக்ஸ் துடுப்பாட்ட அணியின் தலைவரான கீத் பிளட்சர் ஒருமுறை இவரின் பெரினைத் தவறாக அவ்வாறு அழைத்தார்.[6] 1988 ஆம் ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்ட வீரர் என அறிவிக்கப்பட்டார்.[7]