பீட்டல் ஆடு (Beetal goat) என்பது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் பஞ்சாப் பகுதிகளில் பால், இறைச்சி தேவைக்காக வளர்க்கப்படும் ஒரு ஆட்டு இனமாகும். இது ஜமுனபாரி ஆட்டை ஒத்ததாக உள்ளது. இது அமிரிஸ்தரி ஆடு எனவும் அழைக்கப்படுகிறது. பீட்டல் ஆடு பெரிய உடல் அளவைக் கொண்டதாகவும், உயர் இனவிருத்தி ஆற்றல் கொண்டதாகவும், நல்ல பால் கறப்பு திறன் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த ஆடுகளின் தோல் உயர் தரம் வாய்ந்தவை காரணம் இதன் பெரிய அளவு ஆகும். இதன் மெல்லிய தோலில் காலணிகள் மற்றும் கையுறைகள் போன்றவை செய்யப்படுகின்றன. பீட்டல் ஆடுகள் பரவலாக துணைக்கண்டம் முழுவதும் உள்ளூர் ஆடு வளர்போர் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் கூண்டு தீவணத்திற்கும் பழகக்கூடியதாக உள்ளதால் தீவிர ஆடு வளர்ப்போரால் விரும்பப்படுகிறது.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)