பீம்லா போடார்

பீம்லா போடார்
பிறப்புவாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிசமூகப்பணி, பரோபகாரர்
அறியப்படுவதுசமூகச் சேவை
வாழ்க்கைத்
துணை
பீமல் குமார் போடர்
விருதுகள்பத்மசிறீ

பீம்லா போடார் (Bimla Poddar) என்பவர் இந்தியச் சமூகச் சேவகர், தொழிலதிபர், பரோபகாரர் மற்றும் ஞான பிரவாகாவின் நிறுவனர் ஆவார்.[1][2] ஞான பிரவாகா வாரணாசியை தளமாகக் கொண்ட கலாச்சார ஆய்வு மையம். இம்மையம் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.[3] இந்த அமைப்பின் கீழ், போடார் இந்தியாவின் கலாச்சாரம்[4] ஆராய்வது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பண்டைய இந்தியாவின் கலைப்பொருட்கள் அடங்கிய பாரம்பரிய அருங்காட்சியகத்தைப் பராமரித்து வருகின்றார்.[2][5] இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் பிறந்து வளர்ந்தவர் பீமல் குமார் போடாரைத்[6] (பணக்கார வணிகக் குடும்பத்தில் பிறந்தவர்) திருமணம் செய்து கொண்டார். மேலும் அம்புஜா உட்படப் பல குடும்ப நல அமைப்புகளின்[7][8] இயக்குநராக இருந்தார். இதில் அம்புஜா சிமெண்ட் நிறுவனமும் ஒன்று.[6] 2015ஆம் ஆண்டு இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[9]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jnana Pravaha". Jnana Pravaha. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  2. 2.0 2.1 "Kamat". Kamat. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  3. "Varanasi". Varanasi. 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  4. "Benares: Bayly and the Making of World History". Jnana Pravaha. 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  5. "Good Samaritans among UP's 6 Padma awardees". 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017.
  6. 6.0 6.1 "Neotia family". Neotia family. 2015. Archived from the original on 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  7. "Zauba Corp". Zauba Corp. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  8. "Bloomberg". Bloomberg. 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  9. "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 28 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.